ஸ்மார்ட்டாகப் பயணம் செய்யுங்கள்!

நீங்கள் மிகவும் வினைத்திறன் மிக்க போக்குவரத்து முறையினைத் தெரிவுசெய்தால், உங்களின் வாகனத்தின் எரிபொருள் சிக்கனத்தினை அதிகரித்தால், உங்களின் வாகனம் செலுத்தல் பழக்கத்தினை முன்னேற்றினால் மேலும் தரமான பராமரிப்பினை உறுதிப்படுத்தினால் உங்களின் போக்குவரத்துக் கட்டணப் பட்டியலை அதிக அளவிற்குக் குறைக்க முடியும்.

நன்கு திட்டமிடுவோம்

 • தேவையற்ற பயணங்களைக் குறைப்போம்.
 • குறுகிய தூரங்களைச் சைக்கிளில் செல்வோம் அல்லது நடந்து செல்வோம். இது உங்களின் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாகும்.
 • எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பொதுப் போக்குவரத்தினைப் பயன்படுத்துவோம். ஒரே இடத்திற்குப் பயணம் செய்ய விரும்பும் 60 பேர் உள்ளனர் எனக் கற்பனை செய்யுங்கள். பின்வரும் நிலைமையினைப் பற்றிச் சிந்தியுங்கள். அந்த 60 பேரும் காரில் செல்ல விரும்பினால் அவர்களுக்குத் தேவைப்படும் வீதியின் இடவசதி பற்றிச் சிந்தியுங்கள்! இந்த 60 பேரும் பொதுப் போக்குவரத்தில் செல்ல விரும்பினால் அவர்களுக்கு ஒரேயொரு பஸ்தான் தேவைப்படும்.

 

 

 • அலுவலக நேரம் போன்ற போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களை இயலுமான அளவிற்குத் தவிர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் அணுகும் சகல சேவைகளினதும் சந்தடிமிக்க மணித்தியாலங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
 • காரினைச் சேர்ந்து பயன்படுத்துவதை ஊக்குவியுங்கள்.
 • தேவையற்ற பிரயாணங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக உங்களின் பயன்பாட்டுக் கட்டணங்களையும் கொடுப்பனவுகளையும் செலுத்த இண்டர்நெட் வங்கிச் சேவையினைப் பயன்படுத்தவும். இன்று சகல பயன்பாட்டுக் கட்டணக் கொடுப்பனவுகளையும் காப்புறுதி போன்ற அதிகமான சேவைக் கட்டணங்களையும் உங்களின் வீட்டுக் கணினியில் இருந்து அல்லது ஸ்மாட் தொலைபேசியில் இருந்து செலுத்த முடியும்.
 • திடீரென வேகத்தினை அதிகரிப்பதைத் தவிர்க்கவும்.
 • பாதுகாப்புக் காரணங்களுக்காக அன்றி சடுதியாக வேகத் தடையினைப் பிரயோகிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
 • போக்குவரத்து நிலைமைகளை எதிர்பார்த்து வாகனத்தின் திசை சார்ந்த நகர்வினைப் பயன்படுத்தவும்.(சாத்தியமானபோது உந்தத்தினைப் பாதுகாக்கவும்).
 • நெடுஞ்சாலையில் பயணிக்கையில் உங்களின் வேகத்தினைப் பற்றிக் கவனமெடுங்கள். மிகச் சிறந்த வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர்களாகும். ஏனெனில் இந்த வேக வீச்சு குறைந்த அளவு எரிபொருளிற்கு நீண்ட தூர ஓட்டத்தினை வழங்குகின்றது. இந்த வேக வீச்சில் உங்களால் அதிக கிலோமீற்றர்களுக்கு வாகனத்தினைச் செலுத்த முடியும்.

 

 

 • போக்குவரத்து நிலைமைகளை எதிர்பார்த்து வாகனத்தின் திசை சார்ந்த நகர்வினைப் பயன்படுத்தவும். வீதியில் நுழைவதற்கு முன்னர் கூகிள் மெப்ஸ் வழங்கும் உள்ளூர்ப் போக்குவரத்து நிலைமைகள் பற்றிய செயலியினைப் பயன்படுத்தவும்.

 

வாகனத்தின் இயந்திரத்தினை வெறுமனே ஓட்டவேண்டாம்

 • வாகனத்தின் இயந்திரத்தினை வெறுமனே ஓட்டவேண்டாம். இவ்வாறு செய்வது இயந்திரத்தின் ஆற்றல் மற்றும் குளிர்சாதனத்தின் பயன்பாடு ஆகியவற்றிற்கு ஏற்ப மணித்தியாலத்திற்கு 1 – 2 லீற்றர்கள் எரிபொருளினை நுகர்கின்றது.
 • வாகனத்தினை 2 நிமிடங்களுக்கு மேல் தரித்துவைக்க வேண்டுமாயின் அல்லது நிறுத்திவைக்க வேண்டுமாயின் அதன் இயந்திரத்தினை நிறுத்திவிடவும்.

 

உரிய பராமரிப்பு

 • இயந்திரத்தினை உரிய முறையில் நிறுத்தி வைக்கவும். இயந்திரத்தின் சீரான இயக்கத்தில் அவதானிக்கத்தக்க மாற்றம் காணப்படின் அதனைச் சீர்செய்வது வாகனத்தின் எரிபொருள் வினைத்திறனினை 4 சத விகிதத்தினால் முன்னேற்றுகின்றது.
 • குறிப்பிட்ட மைல் அளவுகளில் அல்லது குறிப்பிட்ட நேரத்தில் பில்டர்களையும் உராய்வு நீக்கிகளையும் குளிராக்கல் திரவங்களையும் மாற்றவும்.
 • குறிப்பிட்ட மைல் அளவுகளில் சக்கரத்தின் சீர்பொருத்தத்தினைப் பரிசீலிக்கவும். இது எரிபொருளினை 20 சத விகிதம் வரை சேமிக்கக்கூடியதாகும். சக்கரத்தின் அழுத்தம் 3%.
 • காபுரேடர் கொண்ட இயந்திரத்தில் அடைப்பினைக் கொண்டுள்ள வளிப் பில்டர்களை மாற்றுவதன் மூலம் எரிபொருள் நுகர்வினை 2 முதல் 6 சத விகிதத்தினால் குறைக்க முடியும்.
 • எரிபொருள் தாங்கியின் மூடியினை இறுக்கவும். இதனால் ஆவியாதல் மூலம் எரிபொருள் வீணாவதைத் தவிர்க்கலாம்.

 

தரமான உராய்வு நீக்கிகள்

 • வாகனத்தின் உரிமையாளர் வழிகாட்டியில்’ பரிந்துரைக்கப்பட்டுள்ள தரமான உராய்வு நீக்கிகளைப் பயன்படுத்தவும்.
 • குறிப்பிட்ட மைல் அளவினை அல்லது கால அளவினை மிகைக்க முன்னர் உராய்வு நீக்கியினை மாற்றவும்.

 

வாகனம் செலுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள்

 • வாகனத்தின் கூரை மேல் உள்ள ராக்கையில் சுமைகளை உரிய முறையில் ஏற்றாமல் சென்றால் இழுவிசை காரணமாக கிட்டத்தட்ட 10 சத விகிதத்தினால் எரிபொருள் நுகர்வு அதிகரிக்கின்றது. கூரை மேல் ராக்கைகளைத் தேவையெனின் மாத்திரம் பொருத்தவும். ஸ்பொய்லர்களும் ஏனைய தேவையற்ற பொருத்துகைகளும் வாகனத்தின் எடையினை அதிகரிக்கின்றதேயன்றி அதன் வினைத்திறனினை அதிகரிப்பதற்குப் பங்களிப்பு வழங்குவதில்லை.
 • சூட்கேசுகளையும் ஏனைய பொதிகளையும் காரின் டிக்கியில் ஏற்றவும்.
 • காரினை எப்போதும் 1 ஆம் கியரில் வைத்து ஸ்டார்ட் செய்து பயணத்தினைத் தொடங்கவும். ஆனால் சேறு நிறைந்த பாதையாக இருப்பின் அல்லது சரிவினில் இறங்குகையில் 2 ஆம் கியரில் செல்லவும். நகர்ப்பகுதியில் செல்கையில் உயர் கியருக்கு மாறலாம். இதனால் இயந்திரத்திற்கு சுமை இருக்காது. இயலுமானவுடன் உயர் கியருக்கு மாறவும்.
 • சரியான தருணத்தில் கியரினை மாற்றுவது வாகனத்தின் எரிபொருள் சிக்கனத்தினை அதிகரிக்கும். வாகனத்தின் இயந்திரத்தின் சுழற்சியின் அதிகரிப்பு குறைந்த கியரில் சார்பளவில் அதிக எரிபொருளினை நுகர்கின்றது.
 • வாகனத்தினை நகரவிடாமல் செய்வதற்குக் கிளச்சினைப் பயன்டுத்துவது எரிபொருள் இழப்பிற்குக் காரணமாகின்றது. வாகனத்தினை நியூட்ரலில் வைத்து கை பிரேக்கினை இழுத்து வைப்பது சிறந்ததாகும்.
 • ஏற்றத்தினில் வாகனத்தினை நிறுத்தவேண்டியிருக்கையில் கை பிரேக்கினைப் பயன்படுத்தவும். வாகனத்தினை மீண்டும் ஸ்டார்ட் செய்கையில் கை பிரேக்கினை விடுவிக்க மறக்கவேண்டாம்.
 • வாகனத்தின் உள்ளேயும் டிக்கியிலும் காணப்படும் தேவையற்ற சுமைகளை அடிக்கடி அகற்றவும். இவ்வாறான தேவையற்ற சுமைகள் வாகனத்தின் வினைத்திறன் இழப்பிற்குக் காரணமாகின்றது.
call to action icon