பெறுமதிச் சங்கிலியில் அவற்றின் முக்கியமான வகிபாத்திரம், சக்தி இடைமாற்றத்திற்கான அவற்றின் நிபுணத்துவம் மற்றும் கடப்பாடு ஆகியவற்றிற்கு நாம் நன்றி செலுத்தவேண்டும். நாம் அவற்றின் அனைத்துப் பங்கீடுபாட்டாளர்களுக்கும் மாத்திரமல்லாது சகல சிவில் சமூகத்திற்கும் செயற்திறன்மிக்க ஆலோசகராக இருக்கின்றோம்.

சக்தி முகாமைத்துவம் பற்றிய பொதுமக்களின் அறிவினை அதிகரிப்பது எமது இலக்குகளில் ஒன்றாகும். எனவே சக்தி வினைத்திறன் தீர்வுகள், நடத்தை ஆய்வுகள் அல்லது வீட்டைத் தன்னியக்கமாக்கலில் புதிய உபகரணங்கள், வெப்பமூட்டுதல், காற்றோட்ட வசதிகள் ஆகியவற்றிற்கான  புதிய விருத்தி மாதிரிகள் பற்றிய ஆய்வு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அதன் வளங்களில் பகுதியினை ஒதுக்குகின்றது. மேலும் இத்தகவல்களையும் உத்திகளையும் செயற்திறன் மிகு முறையில் பொதுமக்களுடன் பகிர்கின்றது.

 

 1. 1. நிறுவனங்களில் சக்தி வினைத்திறன் மேம்பாடுகள்

கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளில் தொடர்ச்சியான சக்தி வினைத்திறன் மேம்பாடு மற்றும் சக்திப் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகியவை குறிப்பிட்ட துறைகளில் சக்திச் சேமிப்பினை அடைந்துகொள்வதற்கு மிக முக்கி்யமானதாகும். இத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு நாம் நீண்ட கால் நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்திவருகின்றோம். மேலும் சம்பந்தப்பட்ட ஒழுங்குபடுத்தல் ஏற்பாடுகளின் கீழ் இத்துறைகளில் நிறுவனங்களினால் நியமிக்கப்பட்டுள்ள சக்தி முகாமையாளர்கள் எமது நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் நிகழ்ச்சித்திட்டங்களை ஒருங்கிணைத்து அமுல்படுத்துகின்றனர். தேவையான தொழில்நுட்ப வழிகாட்டலை வழங்குவதன் மூலம் ஆற்றல் உருவாக்கமும் கருத்திட்ட அமுல்படுத்தல் உதவியும் எம்மால் வழங்கப்படுகின்றன.

பாரிய அளவில் சக்தியை நுகரும் நிறுவனங்களில் சக்தி வினைத்திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை அமுல்படுத்த சான்றுப்படுத்தப்பட்ட சக்தி ஆய்வாளர்கள் தொழில்நுட்ப உதவியினையும் ஆலோசனையினையும் வழங்குகின்றனர். சக்தி ஆய்வுகளை மேற்கொள்வதிலும் சக்தி வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டங்களை அமுல்படுத்துவதிலும் சக்திச் சேவைக் கம்பனிகள் (ESCos) சம்பந்தப்பட்டுள்ளன. எம்முடன் பதிவுசெய்துள்ள சக்தி சேவைக் கம்பனிகள் குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட கம்பனிகளாகும். மேலும் சக்தி முகாமையாளர்கள் மற்றும் சக்தி ஆய்வாளர்களின் ஆற்றலைக் கட்டியெழுப்புவதற்கு அவ்வாறான சேவைகளை வழங்கும் கம்பனிகள் குறிப்பிட்ட விடயத்தில் கொண்டுள்ள அவற்றின் ஆற்றலுக்காகவும் குறித்துரைக்கப்பட்டுள்ள தராதரங்களுக்கு அமைவாகப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவதற்கான அவற்றின் ஆற்றலுக்காகவும் மதிப்பிடப்படுகின்றன.

சக்தி முகாமைத்துவச் செயற்பாட்டில் அதிகமானவை சக்திப் பாவனையினை அளப்பதிலும் பதிவுசெய்வதிலும் ஈடுபட்டுள்ளன. எனவே எவ்விதக் குறைபாடுமின்றியும் ஈடுசெய்யக்கூடிய செலவிலும் அளக்கும் உபகரணங்கள் கிடைக்கின்றமை சக்திச் சேவைக் கம்பனிகளுக்கும் அதேபோல் சக்தியினை நுகரும் நிறுவனங்களுக்கும் முக்கியமானதாகும். எனவே நிறுவனங்கள், மதியுரைஞர்கள், தொழில்வாண்மையாளர்கள் மற்றும் சக்திச் சேவைக் கம்பனிகள் ஆகியவற்றின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பூரண வசதிகள் கொண்ட கருவிகளுக்கான வங்கி ஒன்று எம்மால் பேணப்படுகின்றது.   

சக்தி நுகர்வினைக் குறைக்கும் இலக்குகளில் சக்தி ஆய்வும் மதியுரைச் சேவைகளும் பிரதான மூலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அரசாங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்களில் ISO 50001 EnMS ஆய்வுகள் உள்ளடங்கலாக சக்தி ஆய்விலும் சம்பந்தப்பட்ட மதியுரைப் பணிகளிலும் நாம் சேவைகளை வழங்கி வருகின்றோம்.

செயற்பாடுகள்

 1. சக்தி முகாமையாளர்கள், சக்தி ஆய்வாளர்கள் மற்றும் சக்திச் சேவைக் கம்பனிகள் ஆகியவற்றினைப் பதிவுசெய்தல்
 2. சக்தி முகாமையாளர்களுக்கு இணைய அடிப்படையிலான கருவியினை உருவாக்கல்
 3. சக்தி அறிக்கையிடலினைக் கட்டாயமாக்குவதற்கு ஒழுங்குவிதிகளைத் தயாரித்தல்
 4. சக்தி முகாமையாளர்களுக்காக மாலை நேர விரிவுரைகளையும் பூரணமான நிகழ்ச்சித்திட்டங்களையும் நடத்துதல்
 5. சாதன முறைமைப் பராமரிப்பு மற்றும் இற்றைப்படுத்தல்கள்
 6. சக்தி முறைமை அளவீடுகளை வசதிப்படுத்தல்
 7. சக்தி ஆய்வினையும் ஏனைய மதியுரைச் சேவைகளையும் மேற்கொள்ளல்

 

 1. 2. சக்திப் பாவனைக்கான தனித்துவமான பென்ச்மார்க்குகள் (SEU)

பென்ச்மார்க்குகளை வழங்குவது என்பது செயலாற்றுகை மேம்பாட்டினை அறிவிப்பதற்கும் அதனை ஊக்குவிப்பதற்குமான நோக்கத்துடன் ஒரு சாதனம், செயன்முறை, வசதி அல்லது நிறுவனம் என்பவற்றின் அளக்கப்பட்ட செயலாற்றுகையினை அவற்றுடனோ அல்லது அவற்றுடன் ஒத்தவற்றுடனோ அல்லது நிலைநாட்டப்பட்ட விதிகளுடனோ ஒப்பிடும் நடைமுறையாகும். பென்ச்மார்க் வழங்குவதைச் சக்திப் பாவனைக்குப் பிரயோகிக்கையில் அது தனித்த உற்பத்தி அல்லது சேவை என்பவற்றின் சக்திச் செயலாற்றுகையினை குறிப்பிட்ட காலப்பகுதியில் அளப்பதற்கான ஒரு பொறிமுறையாகச் செயற்படுகின்றது. நாம் ஐந்து பிரதான துறைகளுக்காக சக்தி நுகர்வு பென்ச்மார்க்குகளை வெளியிட்டுள்ளோம். கணிப்பீட்டு உள்ளீடுகளை அடிப்படையாகக் கொண்டு, சக்தி வினைத்திறனின் படிப்படியான மட்டங்களுக்குச் செல்லும் நிறுவனங்களை இலக்கு வைத்து இந்த பென்ச்மார்க்குகள் திருத்தப்படுகின்றன. திருத்தப்பட்ட பென்ச்மார்க்குகள் இந்த வருடம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. உற்பத்தி அல்லது சேவை ஒன்று தராதரத்தினை விடத் தாழ்வாகச் செயலாற்றினால், பென்ச்மார்க யதார்த்தபூர்வமான சக்தி இலக்கினை வழங்கும். பின்பு முறைமைவாய்ந்த சக்தி முகாமைத்துவம் – செயற்திட்டத்தினை நிறுவுதல், உபாயமார்க்கங்களை அமுல்படுத்துதல், சக்தி நுகர்வினைக் கண்காணித்தல் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் – நடைமுறைப்படுத்தப்பட முடியும்.

செயற்பாடுகள்

 1. தரவுச் சேகரிப்பு, செயன்முறைப்படுத்தல், பகுப்பாய்வு மற்றும் தொகுப்பு
 2. திருத்தப்பட்ட பென்ச்மார்க்குகளை வெளியிடுதல்

அரச மற்றும் உள்ளூராட்சிச் சொத்து உரிமையாளர்கள் மற்றும் வசதி இயக்குனர்கள், முகாமையாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் ஆகியோருக்கு பென்ச்மார்க் பயன்மிக்கதாகும். இது சக்திக் கணக்கீட்டினை வசதிப்படுத்துகின்றது, முன்னேற்றத்திற்கான வாய்ப்பினை மதிப்பிடுவதற்காக வசதி ஒன்றின் சக்திப் பாவனையினை அதேபோன்ற வசதியுடன் ஒப்பிடுகின்றது மேலும் சக்திச் சேமிப்பின் அளவினை அளந்து அதனைப் பரீட்சிக்கின்றது.

சக்தி நுகர்வு பென்ச்மார்க் பகுப்பாய்வினைப் பதிவிறக்க இங்கே சொடுக்கவும்

 

 1. 3. நிர்மானிக்கப்பட்ட சூழலில் சக்தி வினைத்திறன் மேம்பாடு

வர்த்தகக் கட்டிடங்களில் சக்தி நுகர்வின் பென்ச்மார்க்கினை உருவாக்குவது நிறுவனத்தின் சக்தி முகாமைத்துவ உபாயமார்க்கத்தின் அடிப்படைக் கூறாகும். ஏனெனில், நீங்கள் எதனை அளக்கவில்லையோ அதனை உங்களால் முகாமைத்துவம் செய்ய முடியாது. பல வர்த்தகக் கட்டிடச் சந்தைகளில் இந்த நடைமுறையானது நியம இயக்கச் செயல்விதியாக மாறியுள்ளது. ஏனெனில் சக்திச் செலவுகளும் அதனுடன் இணைந்த சுற்றாடல் மற்றும் நிலைபெறுதகு விடயங்களும் சக்தி முகாமைத்துவம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நோக்கத்திற்காக சக்தி வினைத்திறன் மிக்க கட்டிடங்களுக்கான நடைமுறைக்  கோவை 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. சக்தி வினைத்திறன் தொழில்நுட்பங்கள் துரிதமாக விருத்தியடைந்து வருவதால் சந்தையில் கிடைக்கும் நவீன தொழில்நுட்பங்களைக் கருத்திற்கொண்டு கோவையானது திருத்தப்படவேண்டும். மேலும் சர்வதேச தராதரங்களைப் பெருமளவு அடிப்படையாகக் கொண்ட ஆகக் குறைவான சக்திச் செயலாற்றுகைப் பெறுமதிகள் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை. எனவே இந்தப் பெறுமதிகளைப் பரிசீலித்து, குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை இற்றைப்படுத்தி, ஆரம்பத்தில் புதிய சக்தி வினைத்திறன் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பது தேவைப்படுத்தப்படுகின்றது. கோவையின் திருத்தத்துடன்,  நிர்மாணத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில்வாண்மையாளர்கள் கோவைக்கு இயைபுறுவது கட்டாயமாக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் அதனைப் பின்பற்றுவதற்காக விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்படும். குடியிருப்பாளர்களுக்கான சக்தி வினைத்திறன் வழிகாட்டல்கள் பற்றிய பொதுமக்கள் விழிப்புணர்வு நடத்தப்படும்.

செயற்பாடுகள்

 1. சக்தி வினைத்திறன் மிக்க கட்டிடங்களுக்காக திருத்தப்பட்ட நடைமுறைக் கோவையினை வெளியிடுதல்
 2. நிலைபெறுதகு வதிவிடங்களுக்கான வழிகாட்டலை வெளியிடல்
 3. ஆற்றலைக் கட்டியெழுப்பல் மற்றும் EEBC 2020 இன் அமுல்படுத்தல்
 4. விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்

வலு சேமிப்பு கட்டட நடைமுறைக் கோவையினைப் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

 

 1. 4. போக்குவரத்தில் சக்தியினைச் சேமித்துப் பாதுகாத்தல்

போக்குவரத்துத் துறை சக்தி நுகர்வின் பிரதான பரப்பாகும். போக்குவரத்துத் துறையில் சக்தி வினைத்திறன் மேம்பாட்டிற்காக குறிப்பிட்ட முன்னெடுப்புக்கள மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும் சக்தி வினைத்திறன் மேம்பாட்டிற்கான உத்தியோகபூர்வ நிகழ்ச்சித்திட்டங்கள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இது தொடர்பாகப் பரந்த நிகழ்ச்சித்திட்டத்தினை அறிமுகப்படுத்த முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வருடம் இடையீடுகளில் சில அறிமுகப்படுத்தப்படும்.

செயற்பாடுகள்

 1. பஸ் பிரயாணிகளுக்கான இணைய அடிப்படையிலான கருவிக்காக ToR இனைத் தயாரித்தல்
 2. இணைய அடிப்படையிலான கருவியினை உருவாக்குவதற்குக் கம்பனி ஒன்றினைப் பெறுதல்
 3. விநியோகத்திற்காக சைக்கிள்களைக் கொள்வனவு செய்தல்

 

 1. 5. தேயிலைத் தொழிற்துறையில் சக்தி வினைத்திறன் மேம்பாடுகள்

எமது சட்டத்தின் வாசகம் 35 (h)இற்கு அமைவாக சக்தி வினைத்திறன், சக்தியினைச் சேமித்துப் பாதுகாத்தல் மற்றும் சக்தி முகாமைத்துவம் ஆகியவற்றின் தனித்துவமான அம்சங்கள் தொடர்பாக நாம் ஆய்வுகளையும் கணிப்பீடுகளையும் விசாரணைகளையும் முன்னெடுக்கின்றோம், மேம்படுத்துகின்றோம், நடத்துகின்றோம் மற்றும் ஒருங்கிணைக்கின்றோம். இலங்கையின் மிக முக்கியமான தொழிற்துறையான தேயிலைத் தொழிற்துறையினை நவீனமயப்படுத்தவேண்டிய தேவையுள்ளது. தேயிலைக் கொழுந்துகளை உலர்த்திப் பதப்படுத்தும் செயன்முறைக்கு மாத்திரம் நாட்டின் மொத்த மின்சாரத்தில் 2% பயன்படுத்தப்படுகின்றது. சக்தி நுகர்வினைக் குறைப்பதற்கு வினைத்திறன்மிக்க மோட்டர்களைப் பயன்படுத்தலாம் மேலும் VSDக்களைப் பொருத்தலாம். எவ்வாறாயினும் கொழுந்துகளை உலர்த்திப் பதப்படுத்தும் தொட்டிகளின் வெவ்வேறு வடிவமைப்புக் காரணமாக சக்திச் சேமிப்பினை மதிப்பிடுவது கடினமானதாக இருந்து வருகின்றது. எனவே ஒரு நியம பதப்படுத்தும் தொட்டியினை வடிவமைக்குமாறு தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இது புதிய தொழில்நுட்பத்தின் சக்திச் செயலாற்றுகையினைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கு உதவும். எனவே மாற்றியமைக்கப்பட்ட டக்ட், ரேடியேட்டர்கள், செயன்முறைக் கட்டுப்பாடு மற்றும் விசிறும் பொறிமுறை உள்ளடங்கிய பதப்படுத்தும் தொட்டியினை எமது உதவியுடன் தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2017 இல் பாரிய ஒரு முன்னெடுப்பாக நாங்கள் தேயிலை உலர்த்திக்கான மாதிரி ஒன்றினை வடிவமைத்து வருகின்றோம். இதில் ரேடியேட்டர்கள், டக்டுகள், செயன்முறைக் கட்டுப்பாடுகள் மற்றும் விசிறும் பொறிமுறைகள் ஆகியவை உள்ளடங்குவதுடன் இதனை நாங்கள் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றோம். இது சக்திச் செயலாற்றுகையினைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கு உதவும்.

செயன்முறைகள்

 1. வெப்பப் பறிமாற்றியினை அமைத்தல்
 2. VSD யுடன் உலர் பதப்படுத்தும் காற்றாடிகளைப் பொருத்தல்
 3. சென்சர்கள் மற்றும் கட்டுப்பாட்டு முறைமைகளைப் பொருத்துதலும் பரிசீலித்தலும்
 4. தொழிற்சாலை உத்தியோகத்தர்களையும் ஏனைய பங்கீடுபாட்டாளர்களையும் பயிற்றுவித்தல்

 

 1. 6. கைத்தொழில் வலயங்களில் இணைந்த பிறப்பாக்கத்துக்கான (ட்ரை ஜெனரேசன்) சாத்திய வள ஆய்வு

ட்ரை ஜெனரேசன் என்பது குளிரூட்டல், வெப்பம் மற்றும் மின்வலு (CCHP) ஆகியவற்றி்னை இணைந்த வகையில் ஒரு தனித்த சக்தி மூலத்தில் இருந்து சமகாலத்தில் மின்சாரமாகவும் பயன்மிக்க வெப்பமூட்டலாகவும் குளிரூட்டலாகவும் பிறப்பிக்கின்றமையினைக் குறிக்கின்றது. இவ்வாறான விடயத்தில் இணைந்த பிறப்பாக்கத்திற்காக அடிப்படை எரிபொருளின் 89 சதவீத சக்தி பயன்படுத்தப்படலாம். சக்தியினை உச்சபட்சமாகப் பயன்படுத்துவதற்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள சிறந்த முறைகளில் இதுவும் ஒன்றாகும். இந்தச் சூழமைவில் தொழிற்துறைகளில் இணைந்த பிறப்பாக்கத்தினை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியத்தினை ஆராய்வதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

ஹோட்டல் துறையில் இணைந்த பிறப்பாக்கத்திற்கான சாத்தியவள ஆய்வினை நாம் 2015 ஆம் ஆண்டிலே மேற்கொண்டோம். இதன் விளைவாக கைத்தொழில் துறைகளில் இணைந்த பிறப்பாக்கத்தினை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியம் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாறான முறைமையினை உள்நாட்டில் அமுல்படுத்துவதற்கான சாத்தியத்தினை ஆராய்வதும் பங்கீடுபாட்டாளர்களின் மத்தியில் இணைந்த பிறப்பாக்கம் பற்றிய கருத்தியலை ஏற்படுத்தி அவர்களுக்குப் பயிற்சியினை வழங்குவதுமே இக்கருத்திட்டத்தின் நோக்கமாகும். இச்சாத்தியவள ஆய்வினைக் கட்டுநாயக்க மற்றும் பியகம ஏற்றுமதி கைத்தொழில் வலயங்களில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. கைத்தொழில் சேவைகள் பணியகத்தின்(ISB) ஒத்துழைப்புடன் கருத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது

நடைமுறையில் இணைந்த பிறப்பாக்கத்தினை ஒரு செயன்முறையாகப் பயன்படுத்த முடியும். இச்செயன்முறையின் மூலம் இணைப்பிறப்பாக்க ஆலையினால் உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தில் ஒரு பகுதியினை குளிரூட்டலுக்கு அல்லது குளிர்பதனத்திற்குத் தேவைப்படும் குளிர்ந்த நீரினை உருவாக்கப் பயன்படுத்த முடியும். இச்செயற்பாட்டினை வழங்குவதற்காக இணைந்த வெப்பம் மற்றும் மின்வலு ஆலையுடன் உறிஞ்சும் குளிரூட்டி இணைக்கப்படுகின்றது.

இணைந்த பிறப்பாக்கத்தினால் பின்வருவன உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கி்ன்றன:

 • களத்திலேயே, மின்சாரம் மற்றும் வெப்பம் ஆகியவற்றினை உயர் வினைத்திறனுடன் பிறப்பித்தல்
 • குறைக்கப்பட்ட எரிபொருள் மற்றும் சக்திச் செலவுகள்
 • உச்சக் கிராக்கி நிலவும் காலப்பகுதியில் மின்சக்தியின் குறைவான பயன்பாடு
 • களப் பயன்பாட்டிற்காக, இயந்திரத்தின் வெப்பத்தினை மீளப் பயன்படுத்தி கொதிநீரில் இருந்து நீராவியினை உற்பத்தி செய்தல்
 • பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தில் கணிசமான குறைப்பு
 • குளிர்பதனமாக்கும் திரவமாக நீர் பயன்படுத்தப்படுவதால் தீங்குமிக்க இரசாயன மாசாக்கிகள் இல்லாமை
 • கட்டிடத்தின் ஒட்டுமொத்த சக்தி வினைத்திறனினை மேம்படுத்துவதற்கு நன்மைமிக்கது

எனவே ஹோட்டல்கள், துணி மற்றும் ஆடைக் கைத்தொழில்கள் மற்றும் கைத்தொழில் வலயங்கள் ஆகியவற்றில் இணைந்த பிறப்பாக்கத்தினை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியங்களை நாம் ஆராய்ந்து வருகின்றோம் மேலும் முன்மொழிவுகளின் இறுதித் தேர்வு நடைபெற்றுவருகின்றது.

call to action icon