நாம் எவ்வாறு புதிய மீள் புதுப்பிக்கத்தக்க சக்தியினை உருவாக்குகின்றோம்?

2016 அம் ஆண்டளவில் மின்சார உற்பத்தியில் 10 சத விகித இலக்கினை அடைவதற்காக இலங்கை அரசாங்கம் புதிய மீள்புதுப்பிக்கத்தக்க சக்தித் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு எண்ணியுள்ளது. இந்த இலக்கு ஒரு வருடத்திற்கு முன்னமே 2015 ஆம் ஆண்டில் அடையப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் இந்த இலக்கினை 20 சத விகிதமாக அதிகரிப்பதற்கான மேலதிக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டினுள் சுதேச சக்தியினை அதிகரிப்பதன் மூலமாகவும் சக்தி வினைத்திறன் மூலமாகவும் சக்தியினைச் சேமித்துப் பாதுகாப்பதன் மூலமாகவும் சக்தி விநியோகம் மற்றும் பாவனையில் நிலைபெறுதகுதன்மையில் ஒரு புதிய மட்டத்தினை நோக்கி நாட்டினை நகர்த்துவதற்காக ஓர் உயர் நிறுவனத்தினைக் கொண்டிருப்பதற்கான தேவையினை உணர்ந்த காரணத்தினால் இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபை நிறுவப்பட்டது. இந்தத் திருப்புமுனையான சட்டவாக்கத்துடன் சட்டத்தின் 15 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் சகல மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின் திட்டவட்டமான உரித்தாண்மையும் குடியரசிற்கு வழங்கப்பட்டு அவ்வாறான வளங்கள் ஏனைய வேறு தேசிய வளங்களைப் போன்றே நடத்தப்படும். அதிகாரசபையின் பிரதான குறிக்கோள்களில் ஒன்று சக்திப் பாதுகாப்பினை அதிகரித்து அதன் மூலம் நாட்டிற்குப் பொருளாதார மற்றும் சமூக நன்மைகளைக் கொண்டுவரும் நோக்கத்துடன் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை அடையாளம் கண்டு, அவற்றினை மதிப்பிட்டு விருத்தி செய்வதாகும்.

 

புதிய மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி எவ்வாறு உருவாக்கப்படுகின்றது?

எந்தவொரு நபரும் (தனிநபர் அல்லது கம்பனி) எந்தவொரு நேரத்திலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திக் கருத்திட்டத்தினை விருத்தி செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும். இதன்போது வளத்திற்கு அல்லது வளம் காணப்படும் இடத்திற்கு அந்த நபர் எவ்விதமான உரிமையினையும் கொண்டுள்ளாரா அல்லது இல்லையா என்பது கருத்திற்கொள்ளப்பட மாட்டாது. தளம் ஒன்றினைப் பதிவுசெய்வதற்கான குறிப்பிட்ட விண்ணப்பத்திற்கான கட்டணத்தினை எமக்குச் செலுத்திய பின்னர் விண்ணப்பத்தினைச் சமர்ப்பிக்க முடியும். இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு விண்ணப்பதாரர் வெவ்வேறு துணை முகவர்களிடமிருந்து திட்டமிடல் அங்கீகாரத்தினைப் பெறவேண்டும். விண்ணப்பப் படிவங்களை எம்மிடம் பெறமுடியும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு வழிகாட்டி

விண்ணப்பங்களைப் பரிசீலித்து அங்கீகாரத்தினை வழங்கும் அமைப்பு கருத்திட்ட அங்கீகாரக் குழு என அறியப்படுகின்றது (PAC). இக்குழு சட்டத்தின் 10 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் நிறுவப்பட்டுள்ளது.  மீள்புதுப்பிக்கத்தக்க சக்திக் கருத்திட்டங்களை உருவாக்குவதற்காக திட்டமிடல் அங்கீகாரங்களை வழங்குவதுடன் தொடர்புடைய அரசாங்க நிறுவனத்தின் தலைவர்களை அல்லது பிரதிநிதிகளை இக்குழு கொண்டுள்ளது.

மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி உருவாக்கத்தின் பரிணாமத்தினைத் தொடர்ந்து செயன்முறையானது இப்போது போட்டிமிக்க செயன்முறையாகப் பரிணமித்து வருகின்றது. இதன்போது மிகவும் செலவுச் சிக்கனமான உருவாக்குனர்கள் செலவுச் சிக்கனமற்ற உருவாக்குனர்களை விட வாய்ப்பினைப் பெறுகின்றனர்.

மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி உருவாக்கத்தினை வசதிப்படுத்தி இயலுமாக்குவதற்கு நாம் கிரமமான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களையும் நடத்துகின்றோம். நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான இலக்குக் குழுவினராக மீள்புதுப்பிக்கத்தக்க சக்திக் கருத்திட்டங்களை நடத்தி அவற்றில் ஈடுபடுவதற்கு அங்கீகாரம் வழங்கும்  துணை முகவர்களின் உத்தியோகத்தர்கள் உள்ளனர். செயலமர்வின் குறிக்கோள்களாவன:

  • மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியினை உருவாக்குதல், வள ஒதுக்கீட்டுச் செயன்முறை, சக்தி உருவாக்கப் பரப்புக்கள் பற்றிய பிரகடனம் மற்றும் புதிய மீள்புதுப்பிக்கத்தக்க சக்திக் கருத்திட்டங்களின் வலையமைப்பு இணைப்பு ஆகியவை பற்றிய அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி விழிப்புணர்வினை உருவாக்கல்
  • கருத்திட்ட அங்கீகாரக் குழுவின் வகிபாத்திரம் மற்றும் அங்கீகாரச் செயன்முறையில் துணை முகவர்களின் உத்தியோகத்தர்கள் கொண்டுள்ள பொறுப்புக்கள் பற்றிய விழிப்புணர்வினை உருவாக்கல்
  • EnerGIS மூலம் வள ஒதுக்கீட்டினை வசதிப்படுத்துவதில் எம்மால் வழங்கப்படும் புவியியல் தகவல் முறைமைகள் சேவைகள் பற்றிய அறிவினை வழங்கல்
  • உள்ளடக்கப்படாத பிரதேசங்களுக்கு அண்மையில் அமைந்துள்ள கருத்திட்டங்களுக்கு அங்கீகாரங்களை வழங்குவதில் திட்டமிடல் விடயங்களையும் சாத்தியமான தீர்வுகளையும் கலந்துரையாடல்
  • முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காகக் கருத்திட்ட அங்கீகாரக் குழுவின் பிரதிநிதிகளுடன் மன்று ஒன்றினை உருவாக்கல்
call to action icon