பொதுவாகப் பயன்படுத்தப்படும் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களை நீங்கள் வாங்கச் செல்கையில் சில முக்கியமான ஆலோசனைகளை அறிந்திருக்க வேண்டும். அவற்றின் பயன்பாட்டினைத் திட்டமிடுவதும் முக்கியமானதாகும். பின்வரும் ஆலோசனைகள் வினைத்திறன் பற்றித் தீர்மானிக்க உங்களுக்கு உதவும்.

உகைப்பியக்க அவன்கள்

எப்போதும் பயன்பாட்டுப் பொருளுடன் நியமமான 13 அம்பியர் பிளக் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தவும். இல்லையெனில் அது இலங்கைச் சந்தைக்கு உரிய முறையில் வடிவமைக்கப்பட்டதாக இருக்காது.

வினைத்திறன்மிக்க செயற்பாட்டிற்காக அவனின் உச்சபட்ச கொள்ளளவு வரையில் உணவுப் பொருட்களைச் சேர்க்கவும்.

அடிக்கடி கதவுகளைத் திறக்கவேண்டாம். உள்ளே பார்ப்பதற்காக ஒவ்வொரு தடவை கதவினைத் திறக்கையிலும் வெப்பநிலை 25 பாகை பரனைற்றினால் குறைவடைகின்றது.

செயற்பாடு பூர்த்தியாக்கப்படவேண்டிய குறிப்பிட்ட நேரத்திற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னரே அவனினை அணைத்து விடவும். அவன் பூரணமாகக் குளிர்ச்சி அடையும் வரையில் சேர்மானங்கள் தொடர்ந்தும் பேக் செய்யப்படும் அல்லது அவிக்கப்படும். மாற்றீடாக, ஏனைய உணவுப் பொருட்களை முன்னமே சூடாக்குவதற்கு மிகையான வெப்பம் பயன்படுத்தப்பட முடியும்.

சக்தியினைச் சேமிக்கவேண்டுமாயின் மைக்ரோ வேவ் அவனே சிறந்ததாகும். ஏனெனில் அது விரைவாகச் சமைக்கி்ன்றது. ஆனால் அதன் விலை உயர்வானதாகும். மைக்ரோ வேவ் அவன்கள் சமையல் எரிவாயுவினால் இயக்கப்படும் முதலாம் தலைமுறை அவன்களை வேகமாகப் பதிலீடு செய்து வருகின்றன.

சில உற்பத்தியாளர்கள் அவன்களை முன்னமே சூடாக்குவதைப் பரிந்துரைக்கின்றனர். இவ்வாறு சூடாக்கும் நேரத்தினை இயலுமான அளவு குறைக்கவும் அல்லது தவிர்க்கவும்.

மிக்சர்கள் மற்றும் ஜீசர்கள்

வெவ்வேறு பாவனைகளுக்குச் சரியான பிளேடுகளைப் பயன்படுத்தவும். உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களைப் பரிசீலிக்கவும்.

நேரத்திற்கு நேரம் சிறிய அளவுகளுக்காக அடிக்கடி மிக்சர்களைப் பயன்படுத்துவதை விட அவை உச்சக் கொள்ளவிற்காகப் பயன்படுத்தப்படுவதற்காக நீங்கள் அதனைப் பயன்படுத்துவதைத் திட்டமிடுங்கள். வாரத்திற்கு ஒரு தடவை அல்லது உங்களின் தேவைகளுக்கு ஏற்ப வாசனைத் திரவியங்கள், சீனி, மிளகாய் மற்றும் கறித் தூள் ஆகியவற்றினை அரைத்துக்கொள்ளுங்கள்.

கொள்கலன் நிரம்பிவழியும் வரை அவற்றினை நிரப்பவேண்டாம். இவ்வாறு நிரப்பி அரைக்கையில் வெளிவரும் திரவம் மிக்சர் ஓடிக்கொண்டிருக்கையில் வெளியே வடியும். இவ்வாறு வடியும் திரவம் மோட்டருக்குள் சென்று அதனைச் சேதமாக்கலாம்.

மிக்சருக்குள் ஒருபோதும் மிகையான சேர்மானங்களைச் சேர்க்கவேண்டாம். அல்லது நிரம்பும் வரை சேர்க்க வேண்டாம். இது தேவையற்ற சுமையினை மோட்டருக்கு வழங்குகின்றது. இதனால் அடிக்கடி இறப்பர் சொக்கட்டினை மாற்றவேண்டி ஏற்படுகின்றது. ஏனெனில் அழுத்தத்தினால் சொக்கட் தேய்ந்து போகின்றது.

மிக்சர்களுக்குத் தொடர்ந்தும் ஒரே சொக்கட்டினைப் பயன்படுத்தவேண்டாம். இவ்வாறே குளிர்சாதனங்களுக்கும் ஏனைய மின்சாரப் பயன்பாட்டுப் பொருட்களுக்கும் பயன்படுத்தவேண்டாம்.  உடனடியாக வரும் உயர் மின்சாரம் உபகரணத்தில் உள்ள மின்சார உதிரிப்பாகங்களைச் சேதமாக்கும்.

கீசர்கள் மற்றும் பொய்லர்கள்

சூரிய சக்தியில் இயங்கும் வோட்டர் ஹீட்டர்கள் எப்போதும் அறிவார்ந்த தெரிவாகும். ஏனெனில் இதற்கான எரிபொருள் இலவசமாகக் கிடைக்கின்றது. முறைமையினை ஒரு தடவை பொருத்திவிட்டால் அதனை இயக்குவதற்கான செலவு என்று எதுவுமில்லை.

மின்சாரத்தினால் உதவப்படும் சூரிய சக்தி வோட்டர் ஹீட்டர்கள் இலங்கையில் பணத்திற்கான சிறந்த பெறுமதியினை வழங்குகின்றன.

சவர் குளியல் கருவிகள் குழாய் பைப்களை விடச் சிக்கனமானவையாகும். மேலும் சவர் குளியல் கருவியின் செலவினை சில மாதங்களிலேயே மீளப் பயனாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

கீசர்களில் அல்லது பொய்லர்களில் நீரைச் சூடாக்குவது பெருமளவான சக்தியினை நுகர்கின்றது. மின்சார கீசர்கள் 2000 முதல் 3000 வெற் சக்தியினைத் தேவைப்படுத்துகின்றன. 3000 வெற் கொண்ட கீசர் ஒன்று 50 லீற்றர் நீரினை 35 பாகை செல்சியசில் சூடாக்க 50 நிமிடங்களை எடுக்கின்றது. இதே வேலையைச் செய்ய 2000 வெற் கொண்ட கீசருக்கு 75 நிமிடங்கள் எடுக்கின்றது.

உடனடி கீசரை விட நீரினைக் களஞ்சியப்படுத்தி வைக்கும் கீசர் சிறந்ததாகும். சக்தி வினைத்திறன் மிக்க வோட்டர் ஹீட்டர்கள் ஆரம்பத்தில் சற்று விலை கூடியவையாக இருக்கலாம். ஆனால் இவை குறைந்த இயக்கச் செலவினையே கொண்டுள்ளன.

கீசரின் வெப்ப ஒழுங்காக்கியினைப் பரிசீலிக்கவும். விரைவாக நீரினைச் சூடாக்கி வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்ததுவதற்காக உற்பத்தியாளர்கள் வெப்பநிலையினை ஆரம்பத்தில் உயர்வாக வைக்க எத்தனிக்கலாம்.

சுடுநீர்க் குளியலுக்கு பெண்களுக்கு 50 பாகை செல்சியசும் ஆண்களுக்கு 40 பாகை செல்சியசும் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வெப்பநிலைகளாகும். வெப்ப ஒழுங்காக்கியினை உங்களுக்குத் தேவையான வெப்பநிலையில் வைக்க முடியுமாக இருந்தால் அதனை உள்ளூர் தொழில்நுட்பவியாளரைக் கொண்டு செய்யவும்.

வெளிப் பகுதியில் பொருத்தமான காப்பினைக் கொண்டுள்ள கீசரை வாங்கவும். கீசரில் இருந்து முடிவுக் குழாய் வரை செல்லும் சகல குழாய்களையும் காப்பினால் மூடவும் அல்லது சுவரினுள் புதைக்கவும். உங்களிடம் உள்ள வோட்டர் ஹீட்டர் உரிய முறையில் காப்பீடு செய்யப்படாவிட்டால் அதற்குப் போதிய காப்பீட்டினைச் செய்யவும்.

நீர் வழங்கப்படும் இடத்திலிருந்து தூரத்தில் வோட்டர் ஹீட்டர் பொருத்தப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தவும்.

கீசரினுள்ளே வன்நீரினால் படிவுகள் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும். ஏனெனில் அவை தடையாகச் செயற்படுகின்றன. நீர் வன் நீராக இருந்தால் வினைத்திறன்மிக்க பாவனைக்காக கிரமமான முறையில் அப்படிவுகள் அகற்றப்பட வேண்டும்.

ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை அல்லது ஆறு வருடங்களுக்கு ஒரு தடவை ஹீட்டரின் மூலகத்தினை மாற்றவும். ஏனெனில் மூலகம் தடையினை உருவாக்குகின்றது.

மின்சார கீசர்களுடன் ஒப்பிடுகையில் விறகு அல்லது எரிவாயு அடுப்புக்களினால் நீரினைச் சூடாக்குவது மிகவும் சிக்கனமானதாகும்.

சூரிய சக்தியில் இயங்கும் வோட்டர் ஹீட்டர்கள் எப்போதும் அறிவார்ந்த தெரிவாகும். ஏனெனில் இதற்கான எரிபொருள் இலவசமாகக் கிடைக்கின்றது. முறைமையினை ஒரு தடவை பொருத்திவிட்டால் அதனை இயக்குவதற்கான செலவு என்று எதுவுமில்லை.

call to action icon