காலநிலை உண்மையிலேயே மாறுகின்றதா?

ஆம், உண்மையில் மாறுகின்றது. உண்மையிலேயே வரலாறு நெடுகிலும் உலகின் தோற்றப்பாடு மாறிவருவதுடன் இன்னும் மாறிக்கொண்டே இருக்கின்றது. ஆனால் இந்த மாற்றங்கள் வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு காரணிகளினால் தூண்டப்பட்டுள்ளன. இக்காரணங்களுள் இயற்கை நிகழ்வுகள் உள்ளடங்கினாலும் மிக அண்மைக் காலக் காரணங்களுள் மனிதர்களின் நடவடிக்கைகளும் உள்ளடங்குகின்றன என அறிவியலாளர்கள் நம்புகின்றனர். அறிவியலாளர்களின் கருத்துப்படி உலகம் முழுவதும் இடம்பெறும் அபிவிருத்திச் செயற்பாடுகள் வளியினுள் பெருமளவு பச்சை வீட்டு வாயுவினைச் சேர்த்துள்ளன. இவை காலநிலை மாற்றத்தினைத் துரிதப்படுத்தும் ஆற்றலைக் கொண்டவையாகும்.

பச்சைவீட்டு வாயுக்கள் சுற்றாடலில் உள்ள வெப்பத்தினை உறிஞ்சிக்கொள்கின்றன. கரியமில வாயு (CO2), மீதேன் (CH4), நைத்ரஸ் ஒக்சைட் (N2O) மற்றும் புளோரின் ஏற்றப்பட்ட வாயுக்கள் ஆகியவை சுற்றாடலில் உள்ள முதன்மையான வாயுக்களாகும். இவையே புவி வெப்பமடைதலுக்குப் பங்களிப்பு வழங்குகின்றன.

சுவட்டு எரிபொருட்களை (எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி) எரிப்பதாலும் திண்மக் கழிவு, மரங்கள் மற்றும் மர உற்பத்திகள் ஆகியவற்றினை எரிப்பதாலும் கரியமில வாயு சுற்றாடலுக்குள் நுழைகின்றது.  ஒளித்தொகுப்பிற்காகப் பசுந்தாவரங்கள் கரியமில வாயுவினை உறிஞ்சுகின்ற காரணத்தினால் சுற்றாடலில் இருந்து அது அகற்றப்படுகின்றது அல்லது   பிரிக்கப்படுகின்றது.

மீதேன் வாயு கால்நடைகளில் இருந்தும் ஏனைய விவசாய நடைமுறைகளின் மூலமும் மாநகர திண்மக் கழிவு மூலம் நிரப்பப்படும் காணிகளில் உள்ள சேதனக் கழிவுகள் அழுகுவதாலும் நீர் நிரம்பியுள்ள மரம் செடி கொடிகளில் இருந்தும் வெளியேறுகின்றது.

விவசாய நடவடிக்கைகள் மூலமாகவும் கைத்தொழில் நடவடிக்கைகள் மூலமாகவும் சுவட்டு எரிபொருள் மற்றும் திண்மக் கழிவுகளை எரிப்பதன் மூலமாகவும் நைதரசன் ஒக்சைடு வெளிவிடப்படுகின்றது.

ஹைட்ரோபுளோரோ காபன்கள், பேர்புளோரோ காபன்கள் மற்றும் சல்பர் ஹெக்சா புளோரைட் போன்ற புளோரினேற்றப்பட்ட வாயுக்கள் செயற்கையான சக்தி வாய்ந்த பச்சைவீட்டு வாயுக்கள் என்பதுடன் இவை பல்வேறு விதமான கைத்தொழில் நடவடிக்கைகளினால் வெளியிடப்படுகின்றன.

புளோரினேற்றப்பட்ட வாயுக்கள் சில சந்தர்ப்பங்களில் ஓசோனினைக் குறைக்கும் பதார்த்தங்களுக்குப் பதிலீடாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாயுக்கள் சிறிய அளவுகளில் வெளியிடப்படுகின்ற போதிலும் இவை சக்தி வாய்ந்த பச்சை வீட்டு வாயுக்களாகும். எனவே இவை புவி வெப்பமடைவதற்கான உயர் சாத்தியத்தினைக் கொண்ட வாயுக்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன (GWP).

call to action icon