நாம் யார

இலங்கையில் நிலைபெறுதகு சக்திப் புரட்சியினை முன்னெடுக்கும் பொறுப்பினைக் கொண்ட ஓர் ஆளுகை அமைப்பு என்கின்ற ரீதியில் சூரிய சக்தி, காற்றின் சக்தி, நீர்சக்தி மற்றும் உயிரியப் பொருண்மை உள்ளிட்ட எமது தேசத்தின் செழுமையான சக்தி வளங்களின் விருத்தியினை வசதிப்படுத்துவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

பாரம்பரியமான சுவட்டு எரிபொருளில் இருந்து பிறப்பிக்கப்படும் சக்தி பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்திற்குக் காரணமாக அமைந்து சுற்றுச் சூழலுக்கு பாரதூரமான தாக்கத்தினை ஏற்படுத்தும் இக்காலகட்டத்திலே நிலைபெறுதகு சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகியவை உலகின் சக்தி எதிர்காலத்தில் முக்கியமான வகிபாத்திரத்தினை வகிக்கின்றன. மேலும் மீள்புதுப்பிக்க முடியாத சுவட்டு எரிபொருள் துரிதமாக முடிவடைந்து வருகின்றமையானது அரசாங்கங்களும் பொறுப்புவாய்ந்த சுற்றுச் சூழல் அதிகார அமைப்புக்களும் பல தொழிற்துறைகளும் தமது சக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுற்றாடலில் மிகக் குறைவான தாக்கத்தினைக் கொண்டுள்ள மாற்று மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மூலத்தினைப் பரிசீலிக்க வழிகோலியுள்ளது. இலங்கையில் இயங்கும் தன்முனைப்பான ஒர் அரசாங்க அதிகார அமைப்பு என்கின்ற ரீதியில் இலங்கை அதன் சக்தித் தேவைகளை நிலைபெறுதகு முறையில் பூர்த்திசெய்ய உதவுவதற்கு இவ்வாறான நிலைபெறுதகு உலகப் போக்குகளுக்கு நாம் இயைபுறத் திட்டமிட்டுள்ளோம்.

சக்தித் துறையில் உபாயமார்க்கமிக்க முதலீடுகளை மேற்கொள்ள நாம் எண்ணியுள்ளோம். இந்த முதலீடுகள் எதிர்காலத்தில் தூய்மையானதும் நிலைபேறானதும் சுதேச ரீதியாகப் பெறப்பட்டதுமான சக்தித் தீர்வுகளுக்கு இலங்கை இடைமாற்றமடைவதை இயலுமாக்கும். எமது சக்தி வளங்கள் சுரண்டப்படுவதில் இருந்தும் அவற்றினைப் பாதுகாக்க நாம் எண்ணியுள்ள அதேவேளை நிலைபெறுதகு சக்திக்கான தேசத்தின் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்காகப் புத்தாக்கமிக்க சக்தித் தீர்வுகளை உருவாக்குவதற்கு எம்மை இயலுமாக்கும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி மற்றும் அறிவு மாற்றம் ஆகியவற்றினையும் நாம் வசதிப்படுத்துகின்றோம்.

எமது தொலைநோக்கு

சக்தி பாதுகாக்கப்பட்ட இலங்கை

எமது பணிநோக்கு

மிகச் சிறந்த நிலைபெறுதகு நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதனால் இயற்கைச் செல்வம், மானுடச் செல்வம் மற்றும் பொருளாதாரச் செல்வம் ஆகியவற்றினைப் பாதுகாப்பதன் மூலம் இலங்கை சக்திப் பாதுகாப்பினைப் பெற வழிவகுத்து, தேசிய அபிவிருத்திப் பயணத்தில் ஆராய்ச்சி, வசதிப்படுத்தல், ஆய்வு மற்றும் அபிவிருத்தி மற்றும் அறிவு முகாமைத்துவம் மூலம் சுதேச சக்தி வளங்களை உருவாக்கி சக்தி வளங்களைப் பாதுகாக்கும் அதன் சகல முயற்சிகளிலும் தேசத்திற்கு வழிகாட்டல்.

call to action icon