எமது மரபுரீதியான சமையல்காரர்களுக்கு நாம் சவால் விடுப்பதற்குச் சரியான தருனம் இதுவேயாகும்!

20 - 4 சமையல் கலை பற்றி உங்களுக்குத் தெரியுமா? இது முயன்று பரீ்ட்சிக்கப்பட்ட முறையாகும்.

  • மரக்கறிகளையும் இறைச்சியையும் மீனையும் வெட்டி அவை பதமாகும் வரையில் விடவும்.
  • மசாலாவினையும் ஏனைய சேர்மானங்களையும் சேர்க்கவும்.
  • அடுப்பினைப் பற்றவைத்து இறைச்சியினையும் மரக்கறிகளையும் சமைக்க ஆரம்பிக்கவும்.
  • இதேவேளை அரிசியைக் கழுவவும்.
  • அதிக நெருப்புத் தேவைப்படுபவற்றினைச் சமைக்க ஆரம்பித்து பின்னர் குறைந்த நெருப்புத் தேவைப்படுபவற்றினைச் சமைக்கவும்.

 

பொரித்தல்
அவித்தல்
கறிகளைச் சமைத்தல்
காய்கறிகளைச் சமைத்தல்

வினைத்திறன் மிக்க அடுப்புக்களுக்கான தேடல்

  • 78.5% வீடுகளில் சமையலுக்காக விறகுகளையே பயன்படுத்துகின்றனர்.
  • மொத்த சமையல் எரிவாயுப் பாவனையில் 84% வீட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.
  • இருப்பினும் விறகுகளையும் வினைத்திறனற்ற சமையல் எரிவாயு அடுப்புக்களையும் பயன்படுத்துவதில் உள்ள பூரணமற்ற தொழில்நுட்பங்கள் காரணமாக வீட்டுச் சமையலில் பாரிய அளவில் சக்தி வீணாதல் இடம்பெறுகின்றது.
  • பேர்னர்களைச் ஒன்றாகச் சேர்த்துப் பயன்படுத்துவதும் பொருத்தமான அளவிலான பாத்திரங்களைப் பயன்படுத்துவதும் சக்தி வீணாகுவதைக் குறைக்கும். அளவுக்குப் பெரிதான பாத்திரங்கள் சக்தியினை வீணாக்குகின்றன. 8 அங்குல பேர்னரில் 6 அங்குல விட்டமுடைய பாத்திரத்தினை வைப்பது பேர்னரின் சக்தியில் அரைவாசியினை வீணாக்குகின்றது.

வினைத்திறன் மிக்க அடுப்புக்களுக்கான தேடல்

  • மிகக் குறைந்த வினைத்திறன் - 5 - 8%

 

Anagi அடுப்பு

  • வினைத்திறன் - 17 - 20%

 

பின்வருவனவற்றின் மூலம் வினைத்திறனினை உச்சப்படுத்த முடியும்:

  • இரண்டு பேர்னர்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தல்
  • மரத்துண்டுகளை எரித்தல்
  • போதிய காற்றோட்டத்தினை உறுதிப்படுத்தல்

 

திரவப் பெற்றோலிய எரிவாயுக் குக்கர்

வினைத்திறன் - விறகு அடுப்புக்களுடன் ஒப்பிடுகையில் அதியுயர்வானது

 

வினைத்திறன் - எரிபொருள் மர அடுப்புக்களுடன் ஒப்பிடுகையில் அதியுயர்வானது

  • நீலச் சுவாலையினைப் பெற பேர்னரைச் சரிசெய்தல்
  • பிரசர் குக்கர்களையும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களையும் பயன்படுத்துதல்
  • சுவாலைக்கும் பாத்திரத்திற்கும் இடையில் உயரத்தினைக் குறைத்தல்
  • பேர்னர்களைத் துப்பரவாகப் பேணல்

 

மின்காந்தப் புலம் மூலம் நேரடியாக வெப்பமேற்றும் (இண்டக்சன்) குக்கர்கள்

 

 

வினைத்திறன்மிக்க சமையலுக்கான அடிப்படை உங்களின் சமையல் பழக்கத்தினைப் புரிந்துகொள்வதாகும்

  • சரியான சமனிலையினை அடைதல்

சமைக்கும் முறையினை உணவுடன் பொருத்திப் பார்த்தல். பாணை டோஸ்ட் செய்வதற்கு அவனினைப் பயன்படுத்தவேண்டாம். டோஸ்டர்தான் அதனைச் செய்யவேண்டும். ரைஸ் குக்கர் இருப்பது சோறு சமைப்பதற்கேயன்றி ஏனைய கறிகளைச் சமைப்பதற்கு அல்ல.

  • சரியான பாத்திரத்துடன் பேர்னரைப் பொருத்துதல்
  • பாத்திரத்திற்கு வெளியே சுவாலை சிதறுவதைத் தடுத்தல்

பாத்திரத்தின் பக்கவாட்டில் வழியும் எரிவாயுச் சுவாலைகள் சக்தியினை வீணாக்குகின்றன.

  • மூடியினை மூடி வைக்கவும்

மூடி இல்லாமல் சமைப்பது மூடியுடன் சமைப்பதனை விட 3 மடங்கு சக்தியினைத் தேவைப்படுத்துகின்றது.

உயர் வெப்பக் கடத்து திறன் கொண்ட பாத்திரங்களைப் பயன்படுத்தவும்

  • உயர் வெப்பக் கடத்துகைக்கு திரவப் பெற்றோலிய எரிவாயுக் குக்கரின் மீது ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்தவும்

Use minimum water

  • உணவுகளை அவிப்பதற்கு குறைந்த அளவு நீரினைப் பயன்படுத்தவும். மேலதிக நீர் அவிப்பதற்கு அதிக வெப்பத்தினைத தேவைப்படுத்துகின்றது.

தேவைக்கு மேல் அடுப்பில் வைத்துச் சமைக்க வேண்டாம்

  • தேவைக்கதிகமாகச் சமைக்கப்பட்ட உணவு ருசியற்றதாக இருப்பதோடு சக்தியினையும் வீணாக்குகின்றது.

அவனின் கதவினை மூடி வைக்கவும்

  • திறந்த கதவின் மூலம் வெப்பம் வெளியேறுகின்றது.

உணவினை மீண்டும் மீண்டும் சூடாக்குவதைத் தவிர்க்கவும்

  • உணவினை ஒன்றாகச் சேர்ந்து அருந்துவது குடும்பத்தின் மகிழ்ச்சியான தருனங்களில் ஒன்றாகும். இந்தப் பழக்கத்தினை உருவாக்கவும். இயலுமான அளவு ஒன்றாகச் சேர்ந்து உணவருந்த முயற்சிக்கவும். இதனால் வெவ்வேறு குடும்ப உறுப்பினர்களுக்கு வெவ்வேறு நேரங்களில் உணவினைப் பரிமாற உணவினை மீண்டும் மீண்டும் சூடாக்குவதைத் தவிர்த்து சக்தியினையும் சேமிக்கலாம். சரியான நேரத்தில் தொலைக்காட்சியினையும் வைபையினையும் அணைப்பதே குடும்பத்தினை ஒன்றாகச் சேர்த்து உணவருந்த வைப்பதற்கான திட்டவட்டமான வழியாகும்.

Be trendy

உங்களின் உணவுப் பழக்கங்களை நவீனமயப்படுத்துங்கள்

  • புத்தம் புதிய பழங்களையும் மரக்கறிகளையும் உண்ணுங்கள். இதனால் சமையல் செய்வது குறைந்து சக்தி வீணாவது குறைக்கப்படுகின்றது.
  • வழமையான பானைகளில் சமைப்பதை விட ரைஸ் குக்கரில் சோறு சமைப்பது மிகவும் வினைத்திறன் மிக்கதாகும். பிரசர் குக்கரில் சோறு காய்ச்சும் திறமையினை நீங்கள் அடைந்தால் அது மிகச் சிறந்த தெரிவாக இருக்க முடியும். ஒரு மணித்தியாலத்தினை வெறும் பத்து நிமிடங்களாகக் குறைக்க முடியும்!
  • தானியங்களை இரவில் ஊறவைத்து விடுங்கள். இதனால் காலையில் அவற்றினைச் சமைப்பதற்குக் குறைந்த நேரமே தேவைப்படும்.
  • சோற்றினைப் பிரசர் குக்கரில் சமைப்பது அதிக சக்தியினைச் சேமிக்கக்கூடியதாகும்.
  • பிரசர் குக்கர் 50 - 75% சக்தியினைச் சேமிக்கின்றது.

திறந்த பாத்திரத்தில் சமைப்பதற்கும் பிரசர் குக்கரில் சமைப்பதற்கும் இடையிலான வித்தியாசத்தினைக் கீழேயுள்ள அட்டவணை ஒப்பிட்டுக் காட்டுகின்றது

பொருள் திறந்த பாத்திரம் (நிமிடங்கள்) பிரசர் குக்கர் (நிமிடங்கள்)
உருளைக்கிழங்கு 50 8
முட்டைகள் 30 6
அரிசி 25 10
தானியம் 90 20

 

நீங்கள் பிரசர் குக்கரினை எவ்வாறு பயன்படுத்தவேண்டும்?

பிரசர் குக்கரினைப் போதிய அளவு நீரினால் நிரப்புங்கள். அதிக நீரால் நிரப்பவேண்டாம். மிகையான நீர் இருந்தால் அவிப்பதற்கு 50 சத விகிதம் மேலதிக சக்தி தேவைப்படும்.

அதேவைள உணவினை வேறாக்கிகளில் வைக்கவும்

வேறாக்கியை குக்கரில் வைத்து பின்பு மூடியினை மூடி விடவும்

துளை வழியே நீராவி தப்பி வருகையில் பாரத்தினை அல்லது விசிலை துளையின் மீது வைக்கவும்.

சிறிது நேரத்தின் பின்னர் குக்கரில் இருந்து விசில் வரும். இது குக்கர் சரியான அளவு அழுத்தத்தினை அடைந்து விட்டது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

இப்போது வழங்கப்படும் வெப்பத்தினைக் குறைக்கவும். ஆனால் அழுத்தத்தினைப் பேணுவதற்குப் போதிய அளவு வெப்பம் உள்ளது என்பதை உறுதிப்படுத்தவும். குறிப்பிட்ட சமையல் நேரத்தின் பின்னர் குக்கரை அணைத்து விடவும்.

பிரசர் குக்கரின் மூடியினைத் திறப்பதற்கு முன்னர் 10 முதல் 12 நிமிடங்கள் வரை அதன் சூடு ஆறுவதற்கு அனுமதிக்கவும். குக்கரின் மூடியினை அகற்ற முன்னர் துளையின் மீதான பாரம் அகற்றப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தவும். சூடு குறைவடைகையில் பாரத்தினை அகற்றி பின்னர் சகல நீராவியும் வெளியேறிய பின்னரே கைப்பிடியின் இறுக்கியினைத் தளர்த்தவும்.

குக்கரின் மூடியினை அகற்ற முன்னர் பாரம் அகற்றப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தவும்.

நீராவி வெளியேறும் பாதையினைத் துப்பரவாக வைத்திருப்பதற்காக பாரத்தினையும் காற்றுத் துளையினையும் கிரமமாகத் துப்பரவு செய்யவும் (பல் குத்தும் குச்சியினால்).

call to action icon