சிலவேளைகளில் பழையதுதான் சிறந்தது என்று அர்த்தமில்லை!

அதிகமான குளிர்சாதனங்கள், குறிப்பாக பிரீசர்கள் சக்தியினைக் கபளீகரம் செய்கின்றன. நீங்கள் இதனை உணரமாட்டீர்கள். ஆனால் அவை சாதாரன வீடொன்றின் 30 முதல் 50 சத வீத மின்சார அலகுகளை நுகர்கின்றன. ஆனால் அதிகமான குளிர்சாதனங்களில் இருந்து உச்சப்பயன் பெறப்படுவதில்லை. அக்குளிர்சாதனங்களில் சிலவற்றில் நீர்ப் போத்தல்களைத் தவிர வேறு எதுவும் இருப்பதில்லை.

  • A few bottles of water
  • Dry fish - funnily enough to prevent cats getting at it
  • Sugar and other sweet things - to prevent them from ant attacks
  • Leftovers of cooked food

 

This often fills only 10% of the capacity!!

சிறந்த குளிர்சாதனத்திற்கான தேடல்

உணவுப் பொருட்களில் இருந்து வெப்பத்தினை அகற்ற குளிர்சாதனம் இயந்திர விசையினைப் பயன்படுத்துகின்றது. இந்த வெப்பமானது ரெப்ரிஜெரன்ட் என அறியப்படும் திரவத்தினால் உறிஞ்சப்படுகின்றது. ரெப்ரிஜெரன்ட் மூடப்பட்ட வளையத்தில் சுற்றிவருகின்றது. இது வெப்பத்தினை உறிஞ்சி வாயுவாக மாறுகின்றது. (வெப்பத்தின் ஒரு பகுதி ஒடுக்கும் சுருளின் வழியே பரவிச் செல்கின்றது). பின்னர் உயர் அமுக்கமுடைய வாயுவாக மாறுவதற்காக வாயு கம்பிரசரினால் அழுத்தப்பட்டு சூடான வாயுவாக மாறுகின்றது. உறிஞ்சப்பட்ட வெப்பம் ஒடுக்கும் சுருள்கள் மூலம் சுற்றாடலுக்குள் பரப்பப்படுகின்றது. வெப்பம் பரவிச் சென்றதும் (அகற்றப்பட்டதும்) வாயுவானது திரவ வாயுக் கலவையாக மாறி பிரீசர் மற்றும் குளிர்சாதனத்தின் உள்ளே அமைந்துள்ள குழாய்களின் வலையமைப்பு மூலமாக மீண்டும் சுற்றிச் செல்கின்றது. குளிர்சாதானம் தொடர்ந்தும் இயங்கும் வரையில் இந்தச் சுற்றுத் தொடரும்.

எது சிறந்த ரெப்ரிஜென்ட்?

உலகம் முழுவதும் இயற்கையான ரெப்ரிஜென்டுக்கு மாறுகின்ற ஒரு போக்குக் காணப்படுகின்றது. இவை அனேகமாக ஐதரோக் காபன்களாக உள்ளன. சில முன்னேற்றமடைந்துள்ள கம்பனிகள் முன்னோடித் திட்ட அளவில் கரியமில வாயுவினை ரெப்ரிஜெண்டாகப் பயன்படுத்தியுள்ளன. R 600 போன்ற இந்தப் புதிய ரெப்ரிஜெண்டுகள் ஓசோனைக் குறைக்கும் பதார்த்தங்களாகும் (ODS). அதிகமான சந்தர்ப்பங்களில் குறைவான புவி வெப்பமாக்கும் ஆற்றலையே இவை கொண்டுள்ளன (GWP). அதிகமான ஐதரோக் காபன்கள் தகனம் அடைவதற்குத் தயாராக இருக்கும் பதார்த்தங்கள் என்கின்ற காரணத்தினால் அவற்றினைத் திறந்த தீச்சுவாலையுடன் தொடர்படையச் செய்யாது கவனமாக உள்ளடக்கவேண்டும்.

நவீன குளிர்சாதனங்கள், குறிப்பாக பிரீசர்கள் 20 வருடங்களுக்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட குளிர்சாதனங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் பத்தில் ஒரு பகுதியினையே பயன்படுத்துகின்றன.

எனவே உங்களிடம் பழைய குளிர்சாதனம் இருந்தால் புதிய ஒன்றை வாங்குங்கள். நீங்கள் பணத்தினையும் சக்தியினையும் சேமிப்பீர்கள்

உங்களின் செயற்பாடுகள் பற்றி அவதானமாக இருங்கள்

சரியான அளவினைத் தெரிவுசெய்யுங்கள்

ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு 190 லீற்றர் குளிர்சாதனம் போதியதாகும்.

கதவில் அவதானம் செலுத்துங்கள்

திறந்த கதவுகள் 10 முதல் 20 பாகை வெப்பநிலை வீழ்ச்சிக்குக் காரணமாகின்றன

நீங்கள் நீர் அருந்துகையில் கதவினைத் திறந்துகொண்டு நிற்கவேண்டாம்.

களஞ்சியப்படுத்தும் இடத்தினைப் புத்திசாதுர்யத்துடன் பயன்படுத்தவும்

உங்களது குளிர்சாதனத்தில் வைப்பதற்காக நன்கு இறுக்கமான கொள்கலன்களை வாங்குவது எப்போதும் சிறந்ததாகும். அவை வெற்றாக இருப்பினும் அவற்றினைக் குளிர்சாதனத்தில் வைக்கவேண்டும். ஏனெனில் நன்கு அடைக்கப்பட்ட குளிர்சாதனம் காற்றுக்குக் குறைவான இடத்தினைக் கொண்டுள்ளதால் கதவினைத் திறக்கையில் குறைந்த அளவு குளிரான காற்றே வெளியே கசியும்.

ஒழுங்காகப் பேணவும்

பொருட்களை ஒழுங்கில் பேணவும். உறைவு நீக்கப்படவேண்டிய பொருட்களை மேலேயுள்ள தட்டிலும் சமைத்த உணவுகளையும் பழங்களையும் அடுத்த தட்டிலும் மரக்கறிகளை ஆகக் கடைசித் தட்டிலும் வைக்கவும். ஒழுங்காகப் பேணப்படும் குளிர்சாதனத்தில் பொருட்களைத் தேடுவதும் எடுப்பதும் இலகுவானதாகும். குளிர்சாதனத்தில் இருந்து தேவையற்ற பொருட்களை அகற்றுவதை ஒரு பழக்கமாக ஆக்கவும். குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை அல்லது வாரத்திற்கு ஒரு தடவை எனின் விரும்பத்தக்கது.

கூடையினை அல்லது கொள்கலனினைப் பயன்படுத்தவும்

மரக்கறிகள் மற்றும் பழங்கள் என்பவற்றினை உங்களின் விருப்பம் அல்லது நாளாந்தத் தேவை என்பவற்றிற்கு ஏற்பக் கொள்கலனில் அல்லது கூடையில் களஞ்சியப்படுத்த முடியும். இங்கும் அங்குமிருந்து ஏதாவது ஒன்றினை எடுப்பதற்குப் பதிலாக சரியான கொள்கலனினைச் சரியான நேரத்தில் எடுப்பது இலகுவானதாகும். உணவினை நன்கு அடைக்கப்பட்ட காற்றுப் புக முடியாத கொள்கலனில் வைக்கவும். இல்லாவிடின் குளிர்சாதனத்தில் உள்ள காற்று உணவின் ஈரப்பதனை உறிஞ்சி உணவு அதன் புத்தம் புதிய தன்மையினை இழக்கச் செய்துவிடும்.

திரவங்களை மூடிய பாத்திரங்களில் களஞ்சியப்படுத்தவும்

மூடப்படாத உணவு, குறிப்பாகத் திரவங்கள் குளிர்சாதனத்தினுள் ஈரப்பதனை வெளிவிடுகின்றன. இதனால் கம்பிரசர் கடினமாக வேலை செய்யவேண்டி ஏற்படுகின்றது.

சூடான உணவினைக் களஞ்சியப்படுத்த வேண்டாம்

உணவினை அறை வெப்பநிலையில் ஆறவைத்து பின்பு குளிர்சாதனத்தில் வைக்கவும். உணவு அதிக சூடாக இருப்பின் குளிர்சாதனமும் அதிக வெப்பத்தினை அகற்றவேண்டியிருக்கும்.

குளிரான உணவினைப் பயன்படுத்திய பின்னர் உடனேயே அதனை குளிர்சாதனத்தில் வைக்கவும்

குளிர்சாதனத்தில் இருந்து குளிரான உணவுகளை வெளியே எடுப்பதால் அவை சூடாகுகின்றன. அவற்றினை மீண்டும் குளிரச் செய்வதற்குக் கம்பிரசர்கள் கடினமாக வேலை செய்யவேண்டியிருக்கும்.

உறைவை அகற்றுவதும் உறைவைக் கரைய வைப்பதும்

உறைந்து போயுள்ள பொருட்களை பிரீசரில் இருந்து அகற்றி குளிர்சாதனத்தின் பிரதான பகுதியில் வைக்கவும். இதனால் உணவுப் பொருட்கள் தானாகவே உறைநிலையில் இருந்து நீங்கி 10 முதல் 12 மணித்தியாலங்களில் பயன்படுத்துவதற்குத் தயாராகிவிடும். இவ்வாறு உணவின் உறைவினைக் கரைய வைக்கையில் அது பிரதான களஞ்சியப்படுத்தல் பகுதியிலுள்ள ஏனைய உணவுப் பொருட்களின் வெப்பத்தினை உறிஞ்சிக் கொள்கின்றது. இதனால் கம்பிரசரின் கடின வேலை குறைகின்றது. பிரீசரில் உணவு குறைவாக இருந்தால் கம்பிரசரின் வேலையும் குறைந்துவிடும். குளிர்சாதனத்தில் ஐஸ் தட்டு ஒரு சென்றிமீற்றர் தடிப்பினை அடைகையில் அதனை உருகச் செய்து அகற்றிவிடவும்.

இறப்பர் பட்டிகளைப் பற்றிக் கவனம் செலுத்தவும் (பீடிங்)

கதவின் சீல்கள் தூய்மையாக உள்ளன என்பதையும் உரிய முறையில் மூடப்பட்டுள்ளன என்பதையும் உறுதிப்படுத்தவும். குளிர்சாதனத்தில் துரிதமாக ஐஸ் பிடித்தால் சீல் இறுக்கமாக இல்லை என்று அர்த்தமாகும். கதவின் ஓரத்துடன் உள்ள பொலிமர் சீலிங் கேஸ்கட் உறுதியாக உள்ளது என்பதை உறுதிப்படுத்தவும். இதனைப் பரிசீலிப்பதற்கு கடதாசியினை அல்லது இருபது ரூபாத் தாள் ஒன்றினை கதவின் கேஸ்கட்டிற்கும் குளிர்சாதனத்திற்கும் இடையில் வைத்துக் கதவை மூடவும். இப்போது தாளினை அகற்ற முயற்சிக்கவும். தாள் இறுக்கமாக இருந்து, இழுப்பதனால் அது கிழிந்து விடும் என நீங்கள் நினைத்தால் உங்களது கேஸ்கட் நல்ல நிலையில் உள்ளது. தாள் இலகுவாக வெளியே வந்தால் கதவு வழியே கசிவு உள்ளதையே அது சுட்டிக்காட்டுகின்றது.

போதிய காற்றோட்டத்தினை உறுதிசெய்யவும்.

குளிர்சாதனத்தின் பின்னால் உள்ள ஒடுக்கும் சுருள்களைச் சுற்றிப் போதிய காற்றோட்டம் உள்ளது என்பதை உறுதிப்படுத்தவும். ஒடுக்கும் சுருள்கள் குளிர்சாதனத்தின் வெளியே தெரியாவிட்டால் குளிர்சாதனத்தின் இரண்டு பக்கங்களிற்கும் பின்பக்கத்திற்கும் காற்றோட்டம் தேவையாகும்.

உரிய இடத்தில் வைத்தல்

குளிர்சாதனத்தினை நேரடியாகச் சூரிய ஒளி படும் இடத்தில் இருந்தும் சூடான மேற்பரப்புக்களில் இருந்தும் மேலும் அடுப்பு மற்றும் கேத்தல்கள் போன்ற வெப்பத்தினை உருவாக்கும் பொருட்களில் இருந்தும் தூரத்தில் வைக்கவும்.

சுருள்களைத் தூய்மையாகப் பேணவும்

ஒடுக்கிச் சுருள்களின் மீது தூசு படிவது குளிர்சாதனம் கடுமையாக வேலை செய்வதற்குக் காரணமாகின்றது. குளிர்சாதனத்தின் உட்பகுதியினை வழமையாகத் துப்பரவு செய்கையில் சுருள்களையும் துப்பரவு செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

சரியான அளவுகளை நிர்ணயித்தல்

அதீத உறைவு தேவைப்படும் பொருட்கள் (ஐஸ்கிரீம், இறைச்சி மற்றும் மீன்) குளிர்சாதனத்தில் இல்லாதபோது வெப்பநிலை அளவினை ஆகக்குறைந்த மட்டத்தில் பேணவும். அதீதமாக உறைந்துள்ள உணவுப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கையில் வெப்பநிலையினை 40% எனும் மட்டத்தில் பேணவும் (1 முதல் 5 வரையான அளவீட்டில் 2 இற்கும் 3 இற்கும் இடையில்).

ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை அகற்றவும்

உண்மையில் எவை தேவையோ அவற்றினை மாத்திரம் களஞ்சியப்படுத்தவும். கருவாட்டினையும் இனிப்புப் பொருட்களையும் களஞ்சியப்படுத்தச் சிறந்த இடம் குளிர்சாதனம் அல்ல. அவ்வாறான பொருட்களுக்கு வேறு களஞ்சியப்படுத்தல் முறையினைப் பயன்படுத்தவும்.

call to action icon