எளிமையாக இருப்பதே புத்திசாதுரியமானதாகும்!

உங்களின் வீட்டினைச் சுற்றி மரங்களை வளர்ப்பது வெப்பநிலை அதிகரிப்பதனைப் பெருமளவிற்குக் குறைக்கின்றது. எதற்காக மின்விசிறிக்காகவும் குளிர்சாதனத்திற்காகவும் இவ்வளவு பணத்தினைச் செலவழிக்கவேண்டும்? மிடுக்காக இருங்கள். உங்கள் வீட்டினைச் சுற்றி மரங்களை வளர்த்து உங்கள் மின்கட்டணத்தினைக் குறையுங்கள்.

வளர்க்க வேண்டிய மரங்களின் வகை பற்றி புத்திசாதுர்யத்துடன் இருங்கள்.  பலா மரம் போன்ற பெரிய இலைகளைக் கொண்ட மரங்கள் பிழையான தெரிவாகும். அதேவேளை சிறிய இலைகளைக் கொண்ட வேம்பு மற்றும் புளியமரம் போன்றவை விரும்பத்தக்கவையாகும். இவை வடிகால்கள் மற்றும் மழைநீர்க் கால்வாய்களை அடைக்காது என்பதுடன் குறைவாகவே இலைகளை உதிர்க்கின்றன. இதனால் இடத்தினைத் தூய்மையாகவும் பேண முடியும்.

ஞாபகத்தில் வைத்திருக்கவும்,

குளிர்சாதனத்தினை அடிக்கடி பயன்படுத்தவேண்டாம். இடத்தினைக் குளிராக வைத்திருக்கவும் ஆனால் உறையவைக்கும் குளிரல்ல. சூடான இலங்கைக்கு மிகச் சிறந்த வெப்பநிலை 26 செல்சியசாகும்.

குளிர்சாதனம் என்பது காப்புச் செய்யப்படாத குளிர்பதனப் பெட்டியேயாகும். இது குளிராக்கியின் ஆவியாதலைப் பயன்படுத்தி குளிரினை வழங்கி இதமான வெப்பநிலையினை அறைக்கு வழங்குகின்றது.

கொம்பிரசர் குளிராக்கியினை அழுத்தியதும் அது சூடான மற்றும் உயர் அழுத்தமுடைய வாயுவாக மாறுகின்றது (வரைபடத்தில் சிவப்பு).

சூடான வாயுவானது சுருள்களின் தொகுதி (ஒடுக்கி) ஊடாக ஓடி சூட்டினைப் பரப்பி சூடான திரவக் குளிராக்கியாக ஒடுங்குகின்றது.

சூடான திரவக் குளிராக்கி விரிவாக்க வால்வின் ஊடாக ஓடி, ஆவியாகி, குளிரான அழுத்தம் குறைந்த திரவ வாயுக் குளிராக்கிக் கலவையாக மாறுகின்றது.(வரைபடத்தில் நீல நிறம்).

குளிரான குளிராக்கிச் சுருள்களின் தொகுதியினூடு (ஆவியாக்கி) ஓடி குளிரூட்டப்பட்ட இடத்தினுள் மீண்டும் சுற்ற விடப்பட்டுள்ள வளியின் வெப்பத்தினை உறிஞ்சி கட்டிடத்தினைக் குளிராக்குகின்றது.

குளிரூட்டியினை இயக்க முன்னர் இரண்டு தடவைகள் யோசிக்கவும். திட்டவட்டமாகத் தேவை இல்லை என்றால் மின் விசிறியினைப் பயன்படுத்தவும்.

வெப்ப ஒழுங்காக்கியினை 26 பாகை செல்சியசில் வைக்கவும். வெப்பநிலையில் 1 பாகை மேலதிக வித்தியாசம் கூட குளிராக்கும் சக்திச் செலவில் 4 சத விகித அதிகரிப்பினை ஏற்படுத்துகின்றது.

குளிரூட்டப்பட்ட அறையில் மின்விசிறி இயங்குகையில் நீங்கள் வெப்ப ஒழுங்காக்கியினை உயர் வெப்ப நிலையில் வைக்க முடியும்.

உங்களின் பயன்பாட்டு அட்டவணையினைப் பின்தொடர புரோக்ராம் செய்யக்கூடிய வெப்ப ஒழுங்காக்கியினைப் பொருத்தவும்.

பில்டர்களைத் துப்பரவாகப் பேணவும். ஓட்டைகள் மற்றும் காற்றுத் துளைகளைத் துப்பரவாகப் பேணவும். அடைத்த பில்டர்கள் வளிப் பாய்ச்சலைத் தடுத்து கம்பிரசர் கடினமாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கின்றன.

குளிரூட்டல் நடக்கையில் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி வைக்கவும். ஜன்னல் மறைப்புக்கள் பகல் நேரத்தின்போது சூரிய ஒளியினைக் குறைக்கும் அல்லது தடுக்கும்.

ஜன்னல் அலகு குளிர்சாதனக் கருவியினைக் கட்டிடத்தின் நிழலான பகுதியில் பொருத்தவும். அலகினில் சூரிய வெளிச்சம் படுவதில் இருந்து காக்க மரங்களை வளர்க்கவும்.

வெடித்த மற்றும் உடைந்த ஜன்னல்களை அடைக்கவும் மேலும் சுவரில் உள்ள மின்சாரப் பொருத்துகைகள் மற்றும் ஆளிகளையும் அடைக்கவும். சுவரில் நீர்க்குழாய் பொருத்துகை, ஓட்டைகள் மற்றும் மின்சார வயரிங் இருந்தால் அவற்றினை அடைக்கவும்.

திரையிடப்படாத ஜன்னலின் உள்ளே திரைச்சீலை இடுவது சூரிய வெப்பத்தினைக் குறைப்பதில் பயனற்றதாகும். வெற்று ஜன்னலுக்கு வெளியே சூரியக் கதிர்களைத் தடுக்க எப்போதும் முயற்சிக்கவும்.

மின்விசிறிகள்

மின்விசிறிகளின் பாவனையினைக் கட்டுப்படுத்தவும். இவை பெடஸ்டல் பேன் மற்றும் டேபிள் பேன் ஆகியவற்றினை விட அதிக சக்தியினை நுகர்கின்றன.

பழைய மின் விசிறிகளையிட்டு அவதானமாக இருக்கவும். அவை நம்பத்தகுந்த முறையில் செயற்பட்டாலும் செயற்திறனற்றவையாக இருக்க முடியும்.

உங்களின் மின்விசிறிகளை நன்றாக இயங்கக்கூடிய நிலையில் பேணவும். பாரமரிப்புத் தொடர்பாக உற்பத்தியாளரின் பரிந்துரைகளைப் பரிசீலிக்கவும்.

குளிர் காற்றினை நீங்கள் நேரடியாக உணரக்கூடிய விதத்தில் மின்விசிறியினை வைக்கவும்.

உங்களுக்குத் தெரியுமா?

உங்களின் வீட்டினைக் குளிராகவும் சௌகரியமாகவும் பேணுவதற்கு தரைத்தோற்ற அமைப்பினைப் பேணுவது இயற்கையான மற்றும் அழகான வழியாகும். கவனமாக, இடம்பார்த்து நடப்பட்டுள்ள மரங்கள் நல்ல நிழலினை வழங்குகின்றன. இவ்வாறான மரங்களினால் சௌகரியத்தினை ஏற்படுத்த ஒரு வீட்டிற்குத் தேவைப்படும் சக்தியின் 25 சதவிகிதம் வரையில் சேமிக்க முடியும்.

call to action icon