உங்களின் செயற்பாடுகளால் உருவாக்கப்படும் அனைத்துக் கரியமில வாயுவின் மொத்தமுமே உங்களின் காபன் காலடித்தடம் ஆகும். இது பொதுவாக வருடமொன்றின் காலப்பகுதிக்காக கணக்கிடப்படுகின்றது.

அனேகமாக நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட அளவில் கரியமில வாயுவினை வெளியேற்றுகின்றது. கரியமில வாயு பச்சை வீட்டு வாயு என்கின்ற காரணத்தினால் எமது கண்டத்தினை நாம் காப்பாற்றுவதற்கு எமது தனிப்பட்ட கரியமில வாயு வெளியேற்றத்தினைக் குறைக்க முயற்சிக்கவேண்டும். கரியமில வாயுவினைக் குறைப்பதற்கு நாம் எவ்வளவு வாயுவினைப் பிறப்பிக்கின்றோம் என்பதை முதலில் அறிந்துகொள்ளவேண்டும். இதனை அறிந்துகொள்ள உதவுவதற்கு இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபை மைக்ரோசொப்ட் எக்சல் விரிதாள் செயலியில் ‘இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய’ காபன் கணிப்பானினை உருவாக்கியுள்ளது.

இச்செயலியை நீங்கள் இங்கே பதிவிறக்கம் செய்ய முடியும். இதனைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு ஏதாவது சிரமங்கள் இருப்பின் தயவுசெய்து carbon@energy.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரியில் எம்மைத் தொடர்புகொள்ளுங்கள். நாம் உங்களுக்கு உதவுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

எமது செயற்பாடுகள் எவ்வாறு பங்களிப்பு வழங்குகின்றன?

நீங்கள் செய்கின்ற செயற்பாடுகளினால் வெளியேறும் கரியமில வாயு உங்களின் செயற்பாட்டின் தீவிரத்தன்மையின் அளவிற்கு ஏற்ப வேறுபடுகின்றது. உதாரணமாக, நீங்கள் பாடசாலைக்குக் காரில் செல்வது பாடசாலைக்கு பஸ்சிலோ அல்லது புகையிரதத்திலோ அல்லது பாடசாலை வேனிலோ செல்வதை விட அதிக அளவு வாயு வெளியேற்றத்திற்குப் பங்களிப்பு வழங்கும். உங்களின் வீட்டில் இருந்து பாடசாலை 10 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது என்று ஊகிக்கவும். எனவே நீங்கள் காரில் சென்றால் அக்காரில் நான்கு பேருக்கு மேல் பயணிக்க முடியாது. எனவே ஒரு தனிநபரின் தாக்கத்தினைக் கணக்கிடுவதற்கு காரில் இருந்து வெளியேறும் கரியமில வாயுவின் அளவினை நான்கினால் பிரிக்கவேண்டும். இதேபோன்று நீங்கள் இந்தத் தூரத்தினை பஸ்சில் சென்றால் அந்த பஸ்சில் 80 பயணிகள் பயணிப்பார்கள். எனவே ஒரு தனிநபரின் தாக்கத்தினைக் கணக்கிடுவதற்கு பஸ்சில் இருந்து வெளியேறும் கரியமில வாயுவின் அளவினை 80 இனால் பிரிக்கவேண்டும். எனவே நீங்கள் அதிக அளவு பொதுப் போக்குவரத்தினைப் பயன்படுத்துகையில் நீங்கள் அதிக அளவு சுற்றாடலுக்கு நட்பானவராக மாறுகின்றீர்கள்!

வெவ்வேறு சுவட்டு எரிபொருள்களில் இருந்தும் மின்சாரத்தில் இருந்தும் வெளியேற்றப்படும் கரியமில வாயுவின் தொகை கீழே வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் எண்ணெயினையும் நிலக்கரியினையும் பயன்படுத்தி மின்சாரம் பிறப்பிக்கப்பட்டாலும் அது எப்போதும் ‘தூய்மையானது’ என்று கூற முடியாது என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும். சில செயற்பாடுகளும் அவற்றினால் வெளிவிடப்படும் கரியமில வாயுவின் அளவும் கீழே காட்ப்பட்டுள்ளன.

எரிபொருள் அலகு CO2 வெளியேற்றம்
மின்சாரம் kg/kWh 0.71
டீசல் kg/l 2.74
பெற்றோல் kg/l 2.28
LPG kg/kg 2.73
மன்ணெண்ணெய் kg/l 2.52
விறகு kg/kg 1.51
call to action icon