கொட்டும் நீரில் இருந்து நீர்மின்சாரம் பெறப்படுகின்றது. 2000 வருடங்களுக்கு முன்னர் பண்டைய கிரேக்கர்கள் தானியங்களை அரைப்பதற்காகச் சக்கரங்களைச் சுழற்ற நீரின் சக்தியினைப் பயன்படுத்தியுள்ளனர். இன்று மின்சாரப் பிறப்பாக்கத்திற்கான மிகவும் செலவுச் சிக்கனமான முறைகளில் ஒன்றாக இது இருந்து வருவதுடன் மிகவும் விரும்பத்தக்க முறையாகவும் இருந்து வருகின்றது. உலகின் பாரிய நீர்மின் ஆலையின் சக்தி 22.5 கிகாவற் ஆகும். இது சீனாவிலுள்ள Three Gorges அணைக்கட்டு என அறியப்படுகின்றது.  இது வருடத்திற்கு 80 முதல் 100 டெராவற் உற்பத்தி செய்கின்றது. இது 70 முதல் 80 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்குப் போதியதாகும்.

சிறிய அளவில் இயங்கும் நீர்மின் கருத்திட்டங்கள் தூரமான இடங்களில் வாழும் சமுதாயங்களுக்குப் பெரிய நன்மையினை ஏற்படுத்தலாம்.

நீர்மின்சாரப் பிறப்பாக்கத்தின் அடிப்படைக் கோட்பாடு டேர்பைன்களைச் சுழலச் செய்ய நீரினைப் பயன்படுத்துவதாகும். நீர்மின் ஆலைகள் இரண்டு அடிப்படையான அமைப்பினைக் கொண்டுள்ளன: அணை மற்றும் நீர்த்தேக்கத்துடன் உள்ளவை மற்றும் இவைகள் இல்லாதவை.  பாரிய நீர்த்தேக்கத்துடனான நீர்மின் அணைக்கட்டுக்கள் உச்சக் கிராக்கியினைப் பூர்த்திசெய்வதற்காகக் குறுகிய காலத்திற்கு அல்லது நீண்ட காலத்திற்கு நீரினைச் சேமிக்கக்கூடியவையாகும். இந்த வசதிகளைச் சிறிய அணைக்கட்டுக்களாக வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பிரிக்க முடியும். அதாவது நீரிறைப்பதற்காக மற்றும் மின் பிறப்பாக்கத்திற்காக இரவு அல்லது பகல் பயன்பாடு, பருவகாலப் பயன்பாடு, இறைக்கப்படும் மீளப்பெறக்கூடிய ஆலைகள். அணைக்கட்டுக்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் இல்லாத நீர்மின் ஆலைகள் சிறிய அளவில் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதைக் குறிக்கின்றன என்பதுடன் பொதுவாக இவை ஆறு ஒன்றின் ஓட்டத்தினைக் குழப்பாது இயக்கப்படுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை ஆற்றின் ஓட்டத்தில் இயங்கும் கருத்திட்டங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. சிறிய அளவிலான நீர்மின் கருத்திட்டங்களைப் பலரும் சுற்றாடலுக்குத் தீங்கு விளைவிக்காத தெரிவு எனக் கருதுகின்றனர்.

நீர்மின்சாரம் இலங்கையில் மின்சார உற்பத்திக்கான பிரதான சக்தி மூலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது 1990களின் ஆரம்பப் பகுதி வரை அனேகமாக மின் தேவை அனைத்தையும் வழங்கியது என்றே கூறலாம். பாரிய நீர்மின் ஆற்றலின் பெரும்பங்கு ஏற்கனவே விருத்திசெய்யப்பட்டு நாட்டிற்குப் பெறுமதிமிக்க குறைந்த செலவிலான மின்சாரத்தினை வழங்கி வருகின்றது. தற்போது உச்சக் கிராக்கிமிகு மின்சாரத்தி்னை வழங்குவதற்காகவும் அடிப்படை மின்சாரப் பிறப்பாக்கத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் நீர்மின் நிலையங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. நியமமாக்கப்பட்ட மின்சக்திக் கொள்வனவு உடன்படிக்கையின் (SPPA) கீ்ழ் நீடுறுதியான எண்ணிக்கையிலான சிறிய நீர்மின் சக்தி ஆலைகள் இயங்கிவருவதுடன் அடுத்த சில வருடங்களில் இவற்றுடன் இன்னும் பல சேரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

call to action icon