புவிவெப்ப சக்தி

புவிவெப்ப சக்தி என்பது புவியின் மேற்பரப்பிற்குக் கீழ் இருந்து பெறப்படும் வெப்ப சக்தியாகும். நீர் அல்லது நீராவி ஆகியவை புவியின் மேற்பரப்பிற்கு புவிவெப்ப சக்தியினைக் கொண்டு செல்கின்றன. இதன் பண்புகளின் அடிப்படையில் புவிவெப்ப சக்தியினை வெப்பமாக்குவதற்கும் குளிரூட்டுவதற்கும் பயன்படுத்த முடியும் அல்லது தூய மின்சக்தியினைப் பிறப்பிக்கவும் இதனைப் பயன்படுத்த முடியும். எவ்வாறாயினும் மின்சாரப் பிறப்பாக்கத்திற்கு உயர் அல்லது நடுத்தர வெப்பநிலை தேவைப்படுகின்றது. இவ்வெப்பநிலை பொதுவாகக் கண்டத்தட்டு ரீதியாக முனைப்பான பிராந்தியங்களிற்கு அருகிலேயே காணப்படுகின்றது.

ஐஸ்லாந்து, எல்சல்வடோர், நியூசிலாந்து, கென்யா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் மின்சாரக் கிராக்கியின் கணிசமான பங்கு இப்பிரதான மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியினால் பூர்த்தி செய்யப்படுகின்றது. இது ஐஸ்லாந்தின் வெப்பமேற்றல் தேவைப்பாட்டின் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டதைப் பூர்த்தி செய்கின்றது.

இதன் பிரதான நன்மைகளைப் பொறுத்த அளவில் இது காலநிலை மாற்றங்களில் தங்கியிருப்பதில்லை என்பதுடன் உயர் ஆற்றல் காரணிகளைக் கொண்டுள்ளது: இக்காரணங்களுக்காக புவிவெப்ப மின்சக்தி ஆலைகள் மின்வலையமைப்பின் மிகக் குறைவான மின்சக்தித் தேவைப்பாடுகளை வழங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதுடன் சில சந்தர்ப்பங்களில் குறுகிய கால மற்றும் நீண்ட கால நெகிழ்வுத்தன்மைக்காக துணைநிலைச் சேவைகளையும் வழங்குகின்றன.

தனித்துவமான முதிர்ச்சி மட்டத்துடன் பல்வேறு வகையான புவிவெப்பத் தொழில்நுட்பங்கள் காணப்படுகின்றன. கட்டிடத் தொகுதிகளுக்கு வெப்பத்தினை வழங்கல், புவிவெப்ப வெப்பப் பம்புகள், பச்சை வீடுகள் போன்ற நேரடிப் பாவனைக்கான தொழில்நுட்பங்கள் மற்றும் ஏனைய பிரயோகங்களுக்கான தொழில்நுட்பங்கள் ஆகியவை பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதுடன் இவை முதிர்ச்சியானவை எனவும் கருதப்படுகின்றன. இயற்கையான உயர் ஊடுருவுதன்மையினைக் கொண்ட நீர்வெப்ப நீர்த்தேக்கங்களில் இருந்து மின்சாரத்தினைப் பிறப்பிப்பதற்கான தொழில்நுட்பமும் முதிர்ச்சியுடையதாகும் மற்றும் தங்கியிருக்கக்கூடியதுமாகும் என்பதுடன் 1913 ஆம் ஆண்டில் இருந்து இது இயக்கத்தில் இருந்து வருகின்றது. இன்று இயங்கி வரும் மின்சக்தி ஆலைகளில் பெரும்பான்மையானவை உலர் நீராவி ஆலைகளாகும் அல்லது பாரிய அமுக்கத்துடன் கொதி நீரினை இறைக்கும் (flash plants) ஆலைகளாகும் (ஒற்றை, இரட்டை மற்றும் மூன்று). இவை 180 பாகை செல்சியசுக்கும் மேற்பட்ட வெப்பத்தினை உருவாக்குகின்றன. எவ்வாறாயினும் நடுத்தர வெப்பநிலைப் புலங்கள் மின்சாரப் பிறப்பாக்கத்திற்காக அதிகமதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன அல்லது இணைந்த வெப்பம் மற்றும் மின் பிறப்பாக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு நாம் இரட்டைச் சுற்றுத் தொழில்நுட்ப உருவாக்கத்திற்கு நன்றி செலுத்தவேண்டும். இதன்போது மூடப்பட்ட வளையத்திலுள்ள செயன்முறைத் திரவத்தினை வெப்பமாக்க புவிவெப்பத் திரவம் வெப்பக் கடத்திகள் மூலமாகப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் மேம்படுத்தப்பட்ட புவிவெப்ப முறைமைகள் (EGS) போன்ற புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை இப்போது போதனை விளக்கக் கட்டத்தில் உள்ளன.

 

சமுத்திரத் தொழில்நுட்பங்கள்

சமுத்திரத் தொழில்நுட்பங்கள் இன்னும் ஆராய்ச்சிக் கட்டத்திலும் விருத்திக் கட்டத்திலும் உள்ளன என்பதுடன் வர்த்தக ரீதியாக இன்னும் தயாரற்றவையாக உள்ளன. நம்பிக்கை தரும் சமுத்திரத் தொழில்நுட்பங்களில் அடங்குபவை:

அலையின் சக்தி,  இதன்போது மாற்றிகள் (converters) சமுத்திர அலைகளில் அடங்கியுள்ள சக்தியினை எடுத்து அதனை மின்சாரப் பிறப்பாக்கத்திற்காகப் பயன்படுத்துகி்ன்றன. டேர்பைனைச் சுழற்றும் வளி வெற்றிடங்களைப் பிடிக்கின்ற ஊசலாடும் நீர் நிரல்களைக் கொண்டுள்ள மாற்றிகளும் அலை இயக்கத்தினைப் பயன்படுத்தும் ஊசலாடும் மாற்றிகளும் உயர வித்தியாசத்தினைப் பயன்படுத்துகின்ற தடையினைத் தாண்டி எழுகின்ற மாற்றிகளும் இதில் அடங்குகின்றன.

உயர்வான மற்றும் தாழ்வான அலைக்கு இடையிலுள்ள சக்தியினை ஒன்று சேர்க்க ஓர் கட்டினைப் (அணை அல்லது வேறு தடையினைப்) பயன்படுத்தி அல்லது அலையின் சுழியினைப் பயன்படுத்தி அலையின் சக்தி பிறப்பிக்கப்படுகின்றது. அல்லது அலை ஓடைத் தொழில்நுட்பங்களை அல்லது கலப்புப் பிரயோகங்களைப் பயன்படுத்தி அலையின் சக்தி பிறப்பிக்கப்படுகின்றது.

ஆறு ஒன்று சமுத்திரத்தினுள் வீழ்கையில் ஏற்படும் உப்புச் செறிவு வித்தியாசத்தினால் நீலச் சக்தி எனவும் அழைக்கப்படும் உப்புத்தன்மை வித்தியாசச் சக்தி ஏற்படுகின்றது. போதனைவிளக்கக் கருத்திட்டங்கள் “அழுத்தத் தாமத ஊடுகலப்பினைப்” பயன்படுத்துகின்றன. இதன்போது உப்புநீர்த் தாங்கியில் உள்ள அழுத்தத்தினை அதிகரிப்பதற்கு ஓர் சவ்வின் மூலம் நன்னீர் பாய்கின்றது. மேலும் “உப்பு மற்றும் நன்னீர் கொண்ட மாற்றுத் தாங்கிகள் ஊடாகப் பாய்கின்ற உப்பின் அயன்களுடன் “மறுதலை இலத்திரனியல் டயலிசிஸ்” நிகழ்கின்றது.

வெப்பமான மேற்பரப்புக் கடல்நீருக்கும் குளிர்ந்த கடல்நீருக்கும் இடையில் 800 முதல் 1000 மீற்றர் ஆழத்தில் காணப்படும் வெப்பநிலை வித்தியாசத்தில் இருந்து மின்சக்தியினை சமுத்திர வெப்பச் சக்திச் சேமிப்பு உருவாக்குகின்றது.

call to action icon