மிகத் துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தித் தொழில்நுட்பங்களில் காற்றின் சக்தியும் ஒன்றாகும். இதன் பயன்பாடு உலகளாவிய ரீதியில் அதிகரித்துவருகின்றமைக்கு செலவுகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் ஒரு காரணமாகும். 

காற்றினால் இயங்கும் டேர்பைன்கள் ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் முதன் முதலில் உருவாக்கப்பட்டன. 1830களில் மின்சார ஜெனரேட்டர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மின்சாரத்தினை உற்பத்தி செய்ய பொயியாளர்கள் காற்றின் சக்தியினைப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர். காற்றின் மூலம் மின்சாரத்தினை உற்பத்தி செய்வது இங்கிலாந்தில் 1887 இலும் அமெரிக்காவில் 1888 இலும் இடம்பெறத் தொடங்கியது. ஆனால் நவீன காற்றுச் சக்தி டென்மார்க்கிலேயே முதன் முதலில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இங்கே கிடையான அச்சில் இயங்கும் காற்று டேர்பைன்கள் 1891 இல் உருவாக்கப்பட்டன. மேலும் 1897 ஆம் ஆண்டில் 22.8 மீற்றர் காற்று டேர்பைன் முதலில் இயங்க ஆரம்பித்தது.

சுழலும் காற்றினால் உருவாக்கப்படும் அசைவியக்க சக்தியினை (கைநெடிக்) பயன்படுத்தி மின்சாரத்தினை உற்பத்தி செய்யக் காற்று பயன்படுத்தப்படுகின்றது. காற்றினால் இயங்கும் டேர்பைன்களைப் பயன்படுத்தி அல்லது காற்றின் சக்தியினைச் சேமித்துப் பாதுகாக்கும் முறைமைகள் மூலம் இது மின்சார சக்தியாக நிலைமாற்றப்படுகின்றது. முதலில் காற்று டேர்பைனின் தழைகளைத் (பிளேடுகளை) தாக்குகின்றது. இதனால் தழைகள் சுழன்று அதனுடன் இணைக்கப்பட்டுள்ள டேர்பைனைச் சுழற்றுகின்றன. இது ஜெனரேட்டருடன் பொருத்தப்பட்டுள்ள அச்சினை நகர்த்துவதன் மூலம் அசைவியக்க சக்தியினை சுழலும் சக்தியாக மாற்றுகின்றது. பின்னர் இதனால் மின்காந்தவியல் மூலம் மின்சார சக்தி உருவாக்கப்படுகின்றது.

காற்றின் மூலம் உருவாக்கப்படக்கூடிய சக்தியின் அளவு டேர்பைனின் அளவிலும் அதன் தழைகளின் நீளத்திலும் தங்கியுள்ளது. வெளிப்பாடானது றோடரின் பரிமானங்களுக்கும் காற்றின் வேகத்தின் கன மூலத்திற்கும் விகிதாசாரமானதாகும். கோட்பாட்டு ரீதியாக காற்றின் வேகம் இரட்டிப்பாகையில் காற்றுச் சக்தியின் ஆற்றல் எட்டு எனும் காரணியால் அதிகரிக்கின்றது.

காலப்போக்கில் காற்றினால் இயக்கப்படும் டேர்பைன்களின் ஆற்றல் அதிகரித்துள்ளது.  1985 ஆம் ஆண்டில் வகைமாதிரியான டேர்பைன்கள் 0.05 மெகாவற் ஆற்றலையும் 15 மீற்றர் றோடர் விட்டத்தினையும் கொண்டிருந்தன. இன்று புதிய காற்றுச் சக்தி கருத்திட்டங்கள் 2 மெகாவற் பெருநில டேர்பைன் ஆற்றலையும் 3 – 5 மெகாவற் பெருநிலத்திற்கு அப்பாலான டேர்பைன் ஆற்றலையும் கொண்டுள்ளன.

காற்றினால் இயக்கப்படும் வர்த்தக ரீதியாகக் கிடைக்கக்கூடியதான டேர்பைன்களின் ஆற்றல் 8 மெகாவற்றினை எட்டியுள்ளதுடன் றோடர் விட்டமானது 164 மீற்றர்களாகக் காணப்படுகின்றது.

கிறிஸ்துவுக்கு முன் 3 ஆம் நூற்றாண்டில் இரும்பினை உருக்கும் உலைக்களத்தில் கைத்தொழில் பிரயோகத்திற்காகக் காற்றினை இலங்கை முதன்முதலில் பயன்படுத்தியிருக்கின்றது.

An all island Wind Energy Resource Atlas of Sri Lanka was developed by National Renewable Energy Laboratory (NREL) of USA in 2003, indicates nearly 5,000 km2 of windy areas with good-to-excellent wind resource potential in Sri Lanka. About 4,100 km2 of the total windy area is on land and about 700 km2 is in lagoons. The windy land represents about 6% of the total land area (65,600 km2) of Sri Lanka. Using a conservative assumption of 5 MW per km2, this windy land could support almost 20,000 MW of potential installed capacity. If the windy lagoons are included, the total theoretical wind potential increases to approximately 24,000 MW.

 

காற்றினை அளக்கும் நிலையங்கள்

நாம் காற்றினை அளக்கும் நிலையங்களின் வலையமைப்பினை இயக்கிவருகின்றோம். சக்திக்காகத் தங்கயிருக்கக்கூடிய காற்று வள மையங்களில் இவற்றினை நாம் நிலைப்படுத்தியுள்ளோம். இந்த நிலையங்களில் இருந்து பெறும் தகவல்களை நாம் தனித்த தரவுத் தளமாகத் தொகுத்துள்ளோம். இது வரலாற்று ரீதியான காற்றுத் தரவினை வழங்குவதற்கான மற்றும் தற்போதைய காற்றுத் தரவினை வழங்குவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது.

காற்றினை அளக்கும் நிலையங்களின் வரைபடம்
பதிவிறக்கம்
call to action icon