கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 30-11-2023
மொத்தச் சக்தி
42.37GWh
உச்சக் கிராக்கி
2,162.9MW

இலங்கையில் நிலைபெறுதகு சக்தி

உலகளாவிய சக்தி இடைமாற்றத்திற்குச் சமாந்தரமாக இலங்கையின் சக்தித் துறையின் திடமான விரிவாக்கத்தின் சான்றுடன் இலங்கையின் பல பாகங்களிலும் நடைபெறும் சக்திப் புரட்சியினை நாம் உந்திச் செலுத்துகின்றோம்.

நிலைபெறுதகு சக்தித் தொழிற்துறை பல பொருளதாாரச் செயற்பாடுகளை வசதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதுடன் வருகின்ற வருடங்களில் இது தொடர்ந்தும் துரிதமாக வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் தூய சக்தித் தொழில்நுட்பங்களைப் புத்தாக்கம் செய்து விருத்தி செய்கின்ற நாடுகளுக்கு அபரிமிதமான பொருளாதார வாய்ப்புக்கள் உள்ளன என்பதுடன் இத்தூய சக்தியினைப் பயன்படுத்தும் நாடுகளுக்குப் பாரிய பொருளதார நன்மைகளும் உள்ளன.

இலங்கையில் உயிரியப் பொருண்மை, சூரிய சக்தி மற்றும் காற்றின் சக்தி உள்ளிட்ட பலவகையான மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் வளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. கிடைக்கக்கூடிய சக்தி மூலங்களில் இருந்து சக்தியினைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கையின் தேசிய சக்திக் கொள்கை மற்றும் உபாயமார்க்கங்களுக்கு அமைவாக 2050 ஆம் ஆண்டளவில் இலங்கை கரிம நடுநிலை நாடாக மாறுவதற்கு அபிலாசை கொண்டுள்ளது.

இந்த எதிர்காலத்திற்குத் தயாராகுவதில், சக்தி வினைத்திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் பரந்த தழுவலை நாம் மேம்படுத்துவதுடன் நீடுறுதியான அபிவிருத்தி முயற்சிகள், சக்தி அணுகல், சக்திப் பாதுகாப்பு மற்றும் குறைவான கரிமம் கொண்ட பொருளாதார வளர்ச்சி, உள்நாட்டுப் பெறுமதி உருவாக்கம் மற்றும் மறுமலர்ச்சியேற்படுத்தல் ஆகியவற்றில் சகல வடிவிலுமான மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியின் அதிகரித்த பயன்பாட்டினையும் நாம் மேம்படுத்துகின்றோம்.

SLSEA - இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபை

இலங்கையில் நிலைபெறுதகு சக்திப் புரட்சியினை முன்னெடுக்கும் பொறுப்பினைக் கொண்ட ஓர் ஆளுகை அமைப்பு என்கின்ற ரீதியில் சூரிய சக்தி, காற்றின் சக்தி, நீர்சக்தி மற்றும் உயிரியல் சக்தி உள்ளிட்ட எமது தேசத்தின் செழுமையான சக்தி வளங்களின் விருத்தியினை...

மேலும் வாசிக்க

சக்தி முகாமைத்துவம்

சக்தி வினைத்திறன் என்பது ஒரே வேலையினைச் செய்வதற்கு குறைந்த சக்தியினைப் பயன்படுத்துவதாகும். அதாவது சக்தி வீண் விரயமாக்கப்படுவதை அகற்றுவதாகும். சக்தி வினைத்திறன் பல்வேறு வகையான நன்மைகளைக் கொண்டு வருகின்றது: குடும்பங்களுக்கு ஏற்படும் செலவினைக் குறைத்து முழுப் பொருளாதராத்தின் மீதான செலவினையும் குறைத்து பச்சை வீட்டு வாயு விளைவினையும் குறைக்கின்றது. இவற்றினை அடைந்துகொள்ள மீள்புதுப்பிக்கத்தக்க சக்தித் தொழில்நுட்பமும் உதவுகின்றது...

மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி

வளங்கள் வெறுமையாகிக் கொண்டே செல்கின்றமையும் சக்திக் கேள்வி தொடர்ந்து அதிகரித்து வருகின்றமையும் காலநிலை மாற்றத்தின் மீது பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துவதுடன் இது எமது கண்டத்தின் மீதான சூழியல் அனர்த்தமாகவும் அமைந்துவிடுகின்றது. வளர்ச்சியடைந்து வரும் உலக சனத்தொகையும் சிறந்த வாழ்க்கைத் தரங்களும் சக்தித் தேவைகளின் கிராக்கி வளர்ச்சியடையக் காரணமாகின்றன.

இதனை மனதிற்கொண்டு தொழிற்துறைகளும் துறைகளும் நிலைபெறுதகு சக்திக்கு நிலைமாற்றம் அடைவதற்காக நாம் அவற்றிற்கு ஆதரவு வழங்கிவருகின்றோம்...

Latest News

புத்தாண்டு தொடங்குகிறது

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மக்களின் அபிலாஷைகளை...

03 Jan 2022

மேலும் வாசிக்க
call to action icon