உலகம் முழுவதும் நிலைபெறுதகு பொருளாதார வளர்ச்சியானது சக்திக்கான திடமாக விரிவடையும் கிராக்கிக்கு இட்டுச்செல்வதுடன் அதனுடன் இணைந்த பொருளதார உந்தத்தினைப் பேணுவதற்கான பிறப்பாக்க ஆற்றலுக்கும் இட்டுச் செல்கின்றது. தொழில்நுட்பச் செலவுகள் குறைவடைந்து சுவட்டு எரிபொருள் விலைகள் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் மீள்புதுப்பிக்கத்தக்க மின்வலுத் தொழில்நுட்பங்கள் அதிகரித்த அளவில் போட்டித்தன்மை மிக்கவையாக உள்ளன. உள்நாட்டு சுவட்டு எரிபொருள் நுகர்வினைக் குறைப்பதற்காகவும் ஏற்றுமதிக்காக எண்ணெய் மற்றும் எரிவாயு ஒதுக்கங்களைப் பாதுகாப்பதற்காகவும் பிரதான சக்தி ஏற்றுமதியாளர்கள் கூட மீள்புதுப்பிக்கத்தக்க சக்தித் தெரிவுகளைப் பரிசீலித்து வருகின்றனர். பிராந்தி்யச் சூழமைவில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியினைப் பயன்படுத்துவது விரிவாக்கப்பட்ட மின்சக்தி வலையமைப்பிற்கான உட்கட்டமைப்பு மூலம் நம்பத்தகுந்த மற்றும் ஈடுகொடுக்கக்கூடிய மின்சார விநியோகத்திற்கான அணுகலை அதிகரிக்கலாம், வளங்களின் பல்வகைமைப்படுத்தல் மூலம் விநியோகத்தின் பாதுகாப்பினை மேம்படுத்தலாம், காபன் வெளியேற்றத்தினைக் குறைக்கலாம் மேலும் புதிய முதலீடுகளையும் தொழில்வாய்ப்புக்களையும் போசிக்கலாம்.

இந்த வாய்ப்புக்களை அடைவதற்காக நிலைபெறுதகு சக்தி  அதிகாரசபையிலுள்ள நாம் இடையீடுகள் மற்றும் பதிற்செயற்பாட்டிற்கான பதின்மூன்று வகைகளை உள்ளடக்கி நான்கு அடிப்படை உபாயமார்க்கங்களைப் பயன்படுத்துகின்றோம்:

எதிர்வுகூறல்

எமது சுற்றாடலைக் காப்பாற்றுவதற்கும் சக்தி மூலங்களைப் பல்வகைமைப்படுத்தி சக்தி வினைத்திறனினை மேம்படுத்துவதற்கும் சக்தி நிபுணர்கள் அடுத்த 15 வருடங்களில் ஒரு பாரிய முன்னேற்றத்தினை எதிர்பார்த்துள்ள அதேவேளை இலங்கையில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி முக்கியமானதாக மாறியுள்ளது. எதிர்பார்க்கப்படும் வாய்ப்புக்கள் மற்றும் உலகளாவிய போக்குகள் ஆகியவற்றிற்கு அமைவாக மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியின் பயன்பாடு மற்றும் பிரயோகங்கள் ஆகியவற்றினை அதிகரிப்பதற்கு நிலைபெறுதகு அதிகாரசபை புதிய கருத்தியல்கனை உருவாக்கி, தீர்வுகளை வழங்கி தொழில்நுட்பங்களை உருவாக்க எண்ணியுள்ளது.

வழியமைத்தல்

இலங்கையின் தனித்துவமான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் ஆகியவற்றிற்கு அமைவாக உருவாக்கப்பட்டு, வள மதிப்பீடு, தேசிய மற்றும் பிராந்தியத் திட்டமிடல், முதலீட்டிற்கான இயலுமாக்கும் சட்டகம் அதேபோல ஆற்றல் உருவாக்கம், பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் அரசாங்க ஆதரவு மீதான இணைந்த செயற்பாடுகள் ஆகியவற்றின் மையமான தூண்களில் இருந்து கட்டமைத்துச் செல்ல இலங்கை நிலைபெறுதகு அதிகாரசபை எண்ணியுள்ளது. உரிய காலத்தில் போதிய நிதி வளங்களைக் கவர்ந்திழுப்பதையும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தித் தெரிவுகளை அடையாளம் கண்டு விருத்தி செய்வதையும் இயலுமாக்கும் சட்டகங்களின் அமுல்படுத்தலுக்கு ஆதரவு வழங்குவதும் செலவுச் சிக்கனமான மீள்புதுப்பிக்கத்தக்க சக்தித் தெரிவுகளை அடையாளம் கண்டு விருத்தி செய்வதும் மீள்புதுப்பிக்கத்தக்கவைகளின் கூடுதலான பங்குகளை முறைமையினுள் நம்பத்தகுந்த வகையில் ஒருங்கிணைப்பதும் அதிகாரசபையின் இலக்குகளாகும்.

சக்தி வினைத்திறன் மிக்க இலங்கைக்காக ஒன்று சேர்தல்

மீள்புதுப்பிக்கத்தக்க சக்தித் தொழிற்துறை மற்றும் ஏனைய கருத்திட்டங்கள் ஒன்று மற்றொன்றில் இருந்து கற்றுக்கொள்வதற்கு உதவுவதற்கு நாம் எமது நிதியுதவியளிக்கப்பட்ட கருத்திட்டங்களில் இருந்து அறிவினையும் நுழைபுலங்களையும் தரவினையும் பகிர்கின்றோம். அறிவினைப் பகிர்வது எமது வகிபாத்திரத்தின் இன்றியமையாத அங்கமாகும். இலங்கை நிலைபெறுதகு அதிகாரசபை நிதியுதவி வழங்கும் சகல செயற்பாடுகளும் அறிக்கைகள், வெளியீடுகள், வழிகாட்டிகள், மாதிரிகள் மற்றும் வளங்கள், மன்றுகள், செயலமர்வுகள், மாநாடுகள், களவிஜயங்கள், இணையத்தளங்கள், உள்ளடக்க ஊடகம் மற்றும் சமூக ஊடகம் ஆகியவற்றின் மூலம் அறிவினைப் பரப்புவதை உள்ளடக்குகின்றன.

அறிவினை உருவாக்கும், சேகரிக்கும், பகுப்பாய்வு செய்யும் மற்றும் களஞ்சியப்படுத்தும், பயன்படுத்தும் அல்லது பகிரும் செயற்பாடுகளுடன் நாம் மக்களை ஈடுபடுத்துகின்றோம். நாம் அறிவினை உருவாக்குவது போலவே இந்தச் செயற்பாடுகளினால் தொழிற்துறையின் ஆற்றலையும் ஒத்துழைப்பினையும் பங்காண்மையினையும் வலுப்படுத்துகின்ற வலையமைப்புக்களையும் உருவாக்க முடியும்.

எமது எதிர்காலம்

நிலைபெறுதகு தன்மை எனும் கருத்தியல் ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டினைத் தொடர்கின்ற அதேவேளை அதே செயற்பாட்டினைத் தொடர்வதற்கான எதிர்காலத் தலைமுறைகளின் ஆற்றலில் பாதிப்பினை ஏற்படுத்தாமல் அச்செயற்பாட்டினைத் தொடர்வதாகும். இதனை அடைவதற்கு, கிடைக்கக்கூடிய வளங்கள் மற்றும் உருவாகிவரும் புதிய கிராக்கி ஆகியவற்றின் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவை பற்றிப் புரிந்துகொள்வதன் மூலம் நாம் பல படிகளை எடுக்கவேண்டும். இலங்கை நிலைபெறுதகு அதிகாரசபையிலுள்ள நாம் நிலைபெறுதகு தன்மையே வாழ்க்கை வழியாகவுள்ள எதிர்காலத்தினை நோக்கி அறிவினை உருவாக்குவதில் களமிறங்கி நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.

call to action icon