காற்று மற்றும் சூரிய சக்தி ஆகியவை ஒரே சீராகக் கிடைக்காத வளங்களாகும்.  எனவே இந்த வளங்களில் இருந்து கிடைக்கும் சக்தி விநியோகம் எதிர்வுகூற முடியாததாகும். எவ்வாறாயினும் கோட்பாட்டளவில் இப்பிரச்சினையினை இலகுவாகத் தீர்க்க முடியும். சூரிய சக்தி முறைமை அல்லது காற்றிலிருந்து பெறும் சக்தி முறைமை ஆகியவற்றில் இருந்து ஒரே சீராக மின்வலுவினைப் பெற்றுக்கொள்வதற்கு முறைமையினைப் பெரிதாக்கி மிகையான சக்தியினைப் பின்னைய பாவனைக்காகக் களஞ்சியப்படுத்தி வைக்கவேண்டும். எவ்வாறாயினும் நடைமுறையில் தீர்வானது அவ்வளவு எளிதானதல்ல. ஏனெனில் பாரிய அளவிலான சக்திச் சேமிப்பு முறைமைகள் தற்போது மிக விலை உயர்ந்தவையாக உள்ளன.

எதிர்காலத்தில் சூரிய சக்தி மற்றும் காற்றிலிருந்து பெறும் சக்தியின் பயன்பாட்டில் நீடுறுதிமிக்கவையாக மாறக்கூடிய சக்திச் சேமிப்பு முறைமைக்கான மூன்று தொழில்நுட்பங்கள் உருவாகிவருகின்றன.

  • ஸ்மாட் மின்கலங்கள்
  • வெப்பசக்தி களஞ்சியப்படுத்தல்
  • ஐதரசன் எரிபொருள் கலங்கள்

ஸ்மாட் மின்கலங்கள் – சக்திச் சேமிப்புக் கருத்தியல் பற்றிக் குறிப்பிடுகையில் முதலாவதாக மனதிற்கு வரும் சக்திச் சேமிப்பு முறை இதுவாகவே இருக்க முடியும். மேலும் இந்த விதியின் அடிப்படையிலேயே டெஸ்லா பவர் வோல் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோட்பாடு எளிமையானதாகும்: சூரிய சக்தி அல்லது காற்றின் சக்தியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தில் மேலதிகமாக உள்ள மின்சாரம் மின்கலங்களில் சேமிக்கப்பட்டுத் தேவைப்படுகையில் அல்லது சௌகரியமானது எனக் கருதப்படுகையில் பயன்படுத்தப்படுகின்றது.

தன்னியக்கத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட, வீடுகளிலும் வியாபாரத் தளங்களிலும் பொருத்தப்பட்டுள்ள மின்கலங்கள் மின்சாரக் கேள்வியின் உச்சத்தினைத் தணிப்பதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட முடியும். மேலும் கேள்வி குறைவான நேரங்களில் மேலதிக பிறப்பாக்க ஆற்றலையும் பயன்படுத்த முடியும். தன்னியக்கமாக்கப்பட்ட மின்கல வங்கிகள் உண்மையிலேயே அவசரத் தேவைக்கான களஞ்சியப்படுத்தலாகும். காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற மாற்றமடைகின்ற சக்தி மூலங்களைச் சமனிலைப்படுத்தவும் அதனுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக மின்சக்தியின் மாற்றமடையும் கேள்வியினைச் சமனிலைப்படுத்தவும் இதனைப் பயன்படுத்த முடியும்.

ஈய – அமில மின்கலங்கள் தற்போது சந்தையில் முன்னணி வகிக்கின்றன. ஆனால் அவற்றினை அடிக்கடி மின்னேற்றம் செய்யவோ அல்லது மின்னிறக்கம் செய்யவோ முடியாது என்பதுடன் அவற்றின் சேவைக் காலமும் துண்டிக்கப்படுகின்றது. எனவே ஒவ்வொரு மின்னேற்றம் / மின்னிறக்கத்தின் போதான சக்தி இழப்பும் சுமார் 15 சத விகிதமாகும். இந்த வரையறைகளை ஈடுகொடுக்கக்கூடிய விலையில் நிவர்த்திசெய்வதற்கான ஸ்மாட் மின்கலத் தொழில்நுட்பமானது சூரிய சக்தி மற்றும் காற்றின் சக்திக்கான பாரிய நன்மையாக அமையும்.

வெப்ப சக்தியினைக் களஞ்சியப்படுத்தல் – இந்த சக்திச் சேமிப்பு முறைமையானது  வெப்பச் சூரிய மின்னுற்பத்தி நிலையங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதுடன் இவை சூரியக் கலங்கள் அடங்கிய பெனல்களைப் பயன்படுத்துவதை விடத் தளவாடிகளின் தொகுதி ஊடான வெப்பச் செறிவினையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. செறிவாக்கப்பட்ட சூரிய ஒளியானது உயர் வெப்ப ஆற்றலைக் கொண்ட உருகிய உப்புப் போன்ற பொருளொன்றின் வெப்பநிலையினை அதிகரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. பின்னர் களஞ்சியப்படுத்தப்பட்ட வெப்பமானது நீரினை ஆவியாக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஆவியாக்கப்பட்ட நீர் நீராவி டேர்பைனை இயக்குவதன் மூலம் மின்சாரம் பிறப்பிக்கப்படுகின்றது. இரவில் அல்லது மழை நாட்களில் சக்தியினைப் பெறுவதற்கு முன்கூட்டியே போதிய வெப்ப சக்தியினைக் களஞ்சியப்படுத்தினால் போதுமாகும். இந்தத் தொழில்நுட்பத்தில் உள்ள பாரிய நன்மை என்னவென்றால் பயன்படுத்தப்படும் நீராவி டேர்பைன்களும் ஜெனரேட்டர்களும் நடைமுறையில் சுவட்டு எரிபொருள்களினால் இயக்கப்படும் மின்னுற்பத்தி ஆலைகளில் பயன்படுத்தப்படுவதற்கு ஒப்பானவையாகும்.

மூன்று தொழில்நுட்பங்களிலும் மிகவும் சிக்கலான தொழில்நுட்பமாக ஐதரசன் எரிபொருள் கலங்களைக் கொண்ட தொழில்நுட்பம் காணப்படுகின்றது.  இது இலக்ட்ரோலைசிஸ் என அழைக்கப்படும் செயன்முறைக்காக மாறியாகவுள்ள மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி முறைமையில் இருந்து வரும் மின்சாரத்தினைப் பயன்படுத்துகின்றது. இதன்போது நீரானது ஐதரசனாகவும் ஒக்சிசனாகவும் வேறாக்கப்படுகின்றது. சேமிக்கப்படும் ஐதரசன் பின்னர் எரிபொருள் கலங்களிற்கு வலுவினை வழங்கப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த எரிபொருள் கலங்கள் இலக்ட்ரோலைசிஸ் ஆக மறுதலைச் செயன்முறையினை மேற்கொள்கின்றன. இதில் ஐதரசனும் ஒக்சிசனும் நீருடன் இணைக்கப்பட்டு மின்சாரமும் வெப்பமும் விளைவாகப் பெறப்படுகின்றன.

பாரம்பரிய மின்கலங்களை விட எரிபொருள் கலங்கள் கொண்டுள்ள நன்மை என்னவன்றால் ஐதரசன் மற்றும் ஒக்சிசனின் தடையற்ற விநியோகம் பேணப்படும் வரையில் அவை முடிவின்றி இயங்குகின்றமையாகும். தாக்கமானது உபஉற்பத்தியாக வெப்பத்தினையும் வெளியிடுகின்றது. இதனை நீரினைச் சூடாக்கல் போன்ற செயற்பாடுகளுக்கும் பயன்படுத்த முடியும். இத்தொழில்நுட்பம் இணைந்த வெப்பம் மற்றும் மின்சக்திச் செயற்பாடுகளுக்குப் பொருத்தமானதாகும். இதன்போது எரிபொருள் கலங்களில் இருந்து வரும் இரண்டு விளைவுகளும் பயன்மிக்கவையாகும். ஐதரசனானது அடர்த்திமிக்க சக்திக் காவியாகும் என்பதுடன் இன்று அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள சக்திக் காவியான சுவட்டு எரிபொருளுக்கான அடுத்த பதிலீடாக ஐதரசன் இருக்க முடியும் எனப் பலரும் வாதிட்டு வருகின்றனர்.

சக்திச் சேமிப்பினைப் பெரும் அளவில் ஒழுங்கமைக்க முடியும் அல்லது மின்சக்தி வலையமைப்பின் மூலம் விநியோகிக்க முடியும். பெருமளவில் சக்தியினைச் சேமிப்பதற்கான சிறந்த உதாரணம் வெவ்வேறு உயரங்களில் வைக்கப்பட்டிருக்கும் நீரின் புவியீர்ப்பு சக்தியின் வித்தியாசத்தினால் உருவாகும் சக்தியினைச் களஞ்சியப்படுத்திப் பெறும் நீர்மின்சாரமாகும். இந்த மின்னுற்பத்தி ஆலைகள் உண்மையில் மறுதலையாக்கப்படக்கூடிய மின் ஆலைகள் ஆகும். மின் வலையமைப்பில் உபரியான மின் பிறப்பாக்க ஆற்றல் இருக்கையில் இந்த ஆலைகளினால் நீரினை நீர்த்தேக்கத்தினுள் இறைக்க முடியும். கேள்வியானது உயர்வானதாக இருக்கையில் சாதாரணமாக இயக்கி மின்சக்தியினை வலையமைப்பிற்கு விநியோகிப்பதற்கு நீரினை மீண்டும் பயன்படுத்த முடியும்.

விநியோகிக்கப்பட்ட களஞ்சியப்படுத்தலுக்கான சிறந்த உதாரணம் டெஸ்லா பவர் வோல் மற்றும் பவர் பெக் போன்ற ஸ்மாட் மின்கலங்களாகும். இவற்றினை வீடுகளிலும் வியாபாரத் தளங்களிலும் பொருத்தி கணிசமான ஒன்றுதிரட்டப்பட்ட களஞ்சியப்படுத்தல் ஆற்றலை வழங்க முடியும்.

call to action icon